Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: தோனி திருந்தமாட்டாரு.. இதோ உங்களுக்காகனு விஜய் சங்கரும், ராகுல் திரிப்பாதியும் தான்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முக்கியமான லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வியை தழுவி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஏழு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, நான்கு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட சிஎஸ்கே அணிக்கு தான் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

CSK VS MI

இந்த நிலையில் சிஎஸ்கே தங்களது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. ஆனால் அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, பும்ரா என இரண்டு முக்கிய வீரர்களும் இல்லை. ஆனால் தற்போது சிஎஸ்கேவை விட மும்பை இந்தியன்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி தங்களுடைய பேட்டிங் பலத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக சி எஸ் கே அணியில் வான்ஸ் பேடி மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரேவீஸ் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரவீஸ் சிஎஸ்கே அணியுடன் இணைந்து தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். ஆனால் பிரவீஸ்க்கு சிஎஸ்கே அணி வாய்ப்பு தராது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று ராகுல் திருப்பாதி மற்றும் விஜய் சங்கர் ஆகியோருக்கு தான் இன்றைய ஆட்டத்திலும் சிஎஸ்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.மும்பை வான்கடே மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில் வான்ஸ் பேடி, பிரவீஸ் போன்ற வீரர்களை களமிறக்கினால் அவர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார்கள்.

இதேபோன்று 17 வயது வீரரான ஆயுஷ் மாத் ரேவையும் சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது. ஆனால் சிஎஸ்கே அணி வழக்கம்போல் பழைய வீரர்களை வைத்து விளையாட முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

Story first published: Sunday, April 20, 2025, 17:03 [IST]
Other articles published on Apr 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+