சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, சிஎஸ்கே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியானது.
இது குறித்துப் பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், "பதிரானா காயத்திலிருந்து மீண்டு வருகிறார்" என்றார். இதனால், பதிரானா ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியில் ஆடுவதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அறிவித்தார். டாஸின்போது அவர் இதை அறிவித்தார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் பேசிய அவர், "நாதன் எல்லிஸுக்குப் பதிலாக பதிரானா களமிறங்குகிறார்" என்று அறிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பதிரானா சிஎஸ்கே அணியில் விளையாட மாட்டார் என்று பரவிய செய்திகள், ஆர்சிபி அணியை முட்டாளாக்குவதற்காகப் பரப்பப்பட்டதா? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
மேலும், ஆர்சிபி அணியை சிஎஸ்கே ஏப்ரல் ஃபூல் செய்துவிட்டதாகவும் கிண்டல் அடித்து வருகின்றனர். எனினும், மதீஷா பதிரானா இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு, தன் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதிய கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்று சிஎஸ்கே அணியை வெறுப்பேற்றியது. சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பையும் பறித்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் தற்போது சிஎஸ்கே திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக சிஎஸ்கே ரசிகர்கள் நம்புகின்றனர்.
செய்தி சுருக்கம்: