சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு தவறு உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றாலும் சிஎஸ்கே அணியில் உள்ள தவறு பற்றி பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்களாக டேவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கி இருந்தனர். அது சிறப்பானதாகவும் இருந்தது. ஆனால், இந்த முறை நாதன் எல்லிஸ், நூர் அகமது என இரண்டு வெளிநாட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டி இருந்தது. பிளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் ரச்சின் ரவீந்திராவுடன், டேவான் கான்வேயை பயன்படுத்த முடியவில்லை.

மேலும் அவர் தற்போது ஃபார்மிலும் இல்லை. எனவே ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் துவக்கம் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் பாதியில் பந்துவீசி முடித்த பின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரராக ராகுல் திரிபாதியை இம்பேக்ட் வீரராக சேர்த்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ராகுல் திரிபாதி கலீல் அகமதுவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். அவர் மூன்றாம் வரிசை அல்லது மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துவக்க வீரராக ஆட வைக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் பவர் பிளே ஓவர்களில் அவரை பயன்படுத்தி அதிக ரன்களை சேர்க்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால், அவர் இந்த போட்டியில் ஐந்து பந்துகளை சந்தித்து இரண்டு ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ருதுராஜுடன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார் ரச்சின். இதை அடுத்து ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் இணைந்து துவக்கம் அளிப்பது சரியானதாக இருக்கும் என பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
ராகுல் திரிபாதியை மிடில் ஆர்டரில் ஆட வைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பேட்டிங் வரிசையில் மாற்றத்தை செய்ய வேண்டி இருக்கும். பிளேயிங் லெவனில் வேறு சில வீரர்களை மாற்றினால் மட்டுமே ராகுல் திரிபாதியை மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வைக்க முடியும். எனவே இது சிக்கலான ஒரு முடிவாகவும் இருக்கிறது.
ஒருவேளை ராகுல் திரிபாதி அடுத்து வரும் போட்டிகளில் துவக்க வீரராக பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை என்றால் அது சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஏற்படுத்தும். கடந்த ஆண்டும் சிஎஸ்கே அணி சரியான துவக்க ஜோடியை கண்டறிய முடியாமல் பல போட்டிகளில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அது போன்ற ஒரு நிலை இப்போதும் ஏற்படுமா? என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
செய்தி சுருக்கம்: