For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: நடுவருடன் மோதலில் ஈடுபட்ட DC பவுலிங் பயிற்சியாளர் முனாஃப் பட்டேல்.. பிசிசிஐ அபராதம்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் சூப்பர் ஓவரில் முடிந்தது. ஐபிஎல் வரலாற்றில் இது 50-வது சூப்பர் ஓவராகும். இந்த போட்டியில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் பெற்றது.

இந்த சூழலில் டெல்லி அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் முனாப் பட்டேல் இருக்கின்றார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது போட்டியின் நடுவருக்கும் முனாஃப் பட்டேலுக்கும் மோதல் ஏற்பட்டது.

Munaf Patel

போட்டி நடுவருடன் முனாப் பட்டேல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஓவர் இடைவெளியின் போது தண்ணீர் கொண்டு கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்கு நடுவர் அனுமதி அளிக்காததால் முனாப் பட்டேல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

இது தொடர்பாக முனாப் பட்டேல் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தவறு செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளிகளும் போட்டியின் ஊதியத்திலிருந்து 25% அபராதமும் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் முனாஸ் பட்டேல் விதிகளுக்கு மீறி நடுவரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

இது போட்டி நன்னடத்தை விதைகள் படி தவறாகும் இதனால் முனாப் பட்டேலுக்கு அபராதம் விதிப்பதோடு ஒரு டீமெரிட் புள்ளிகளும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்த முனாஃப் பட்டேல் காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.

இந்த சூழலில் 2017 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முனாஃப் பட்டேல் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளும், 70 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளையும், 3 டி20 போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளையும் முனாப் பட்டேல் வீழ்த்தி இருக்கிறார். 2011 உலக கோப்பையில் முனாஃப் பட்டேல் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 17, 2025, 14:34 [IST]
Other articles published on Apr 17, 2025
English summary
IPL 2025- DC Bowling Coach Munaf Patel Gets 25 Percent Fine For fighting With Umpires
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+