Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- ஈஸியாக ஜெய்க்க வேண்டிய போட்டி இது.. ஆட்டமிழந்த முறை தவறு.. டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல்

டெல்லி: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியின் அருகே சென்ற டெல்லி அணி 19வது ஓவரில் தொடர்ந்து 3 ரன் அவுட்களை பெற்று தோல்வியை தழுவியது. இது குறித்து டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல் கூறியதை தற்போது பார்க்கலாம்.

இந்தப் போட்டி மும்பைக்கு சாதகமாக தான் சென்றது. இந்த ஆட்டத்தில் நாங்கள் முழு கட்டுப்பாட்டில் இருந்தோம். எனினும் நடு ஓவர்களில் நாங்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்தும் சில தவறான ஷாட்டுகளை ஆடி விக்கெட்டுகளை இழந்து ஒரு ஓவர் எஞ்சியிருக்கும் நிலையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்று இருக்கிறோம்.

DC vs MI

எனவே இந்த போட்டியில் நாங்கள் சரியாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். அனைத்து போட்டிகளிலும் உங்களுடைய கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் வந்து உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கக் கூடாது. இதே போன்ற தொடரில் சில நாட்களில் நாம் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழக்கக்கூடும்.

எனவே இதைப்பற்றி அதிகம் யோசித்துக் கொள்ளாமல் அடுத்த போட்டிக்கு பார்க்க செல்வதுதான் சரியான விஷயம். 25 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். ஏனென்றால் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் பனிப்பொழிவும் இருக்கும். ஒருவேளை நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கலாம்.

எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை நினைத்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மூன்று வீரர்களில் இரண்டு பேர் கூட பவர் பிளேவில் பந்து வீச முடியும். இதேபோன்று குல்தீப் இந்த சீசனின் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனக்கு எப்போதெல்லாம் விக்கெட்டுகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் குல்தீப்பிடம் பந்தை கொடுத்தால் போதும்.

இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இந்த போட்டி குறித்து மறந்துவிட்டு அடுத்த போட்டி நோக்கி செல்ல வேண்டும் என்று அக்சர் பட்டேல் கூறியுள்ளார். நடப்பு சீசனில் டெல்லி அணி தற்போது முதல் தோல்வியை தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 13, 2025, 23:57 [IST]
Other articles published on Apr 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+