Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - இருங்க பாய்! ரிஷப் பண்ட் குறித்து டிவிஸ்ட் வைத்த டெல்லி அணி உரிமையாளர்.. எல்லாம் பொய்யா?

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 10 அணிகளும் தாங்கள் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளோம். எந்த வீரர்களை விடுவித்து விட்டோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.இந்த சூழலில் டெல்லி அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டிருப்பது தான் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் ரிஷப் பன்ட் எந்த அணிக்கு செல்ல போகிறார். அவர் ஏலத்திற்கு வந்தால் எவ்வளவு தொகைக்கு போவார் என்று பல கிரிக்கெட் வல்லுநர்களும் விவாதித்து வருகின்றனர். டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்றிருப்பதால் ரிஷப் பண்ட்,அங்கு தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ipl retention rishabh pant delhi capitals

இந்த நிலையில் டெல்லி அணியில் இருந்து பல முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பாராட் ஜிந்தா கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், எங்கள் அணியில் அக்சர் பட்டேல் குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல் ஆகியோர் தக்கவைக்கப்பட்டு இருப்பதன் மூலம் அனுபவமும் இளமையும் கலந்து இருக்கிறது.

நாங்கள் தக்க வைத்த வீரர்கள் பட்டியலை நினைத்து எனக்கு முழு திருப்தி தருகிறது. நான் இன்னும் அதிக வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் விதிகள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த புதிய விதிகளால் நாங்கள் பல யுத்திகளை பயன்படுத்திய வீரர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றோம். தற்போது ஏலத்திற்கு செல்லும்போது எங்களிடம் இரண்டு ஆர் டி எம் கார்டு இருக்கின்றது.

இதன் மூலம் எங்கள் அணியில் இருந்து சென்ற வீரர்களை மீண்டும் நாங்கள் ஆர்டிஎம் கார்டு மூலம் மீண்டும் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் எங்கள் அணியில் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று நம்புகின்றேன். மெகா ஏலத்தில் யாரை வாங்குவது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக உழைத்து வருகின்றோம்.

பலமான அணியை உருவாக்குவது எங்களுடைய இலக்கு என்று பாராட் ஜிந்தால் கூறியுள்ளார். இதன் மூலம் ரிஷப் பண்டை டெல்லி அணி ஆர் டி எம் கார்டு மூலம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பதை தான் அவர் மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Story first published: Thursday, October 31, 2024, 21:58 [IST]
Other articles published on Oct 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+