Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LSG vs DC- அதிர்ஷ்டத்தால் டெல்லி அணி வென்றது.. லக்னோ தோல்வி குறித்து ரிஷப் பண்ட் பேச்சு

விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 210 ரன்கள் என்ற இலக்கை கேசிங் செய்த டெல்லி அணி 65 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை அடுத்து ஆஸ்டோஸ் சர்மா மற்றும் விப்ராஜ் விதம் ஆகியோர் அபாரமாக விளையாடி டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் அதிர்ஷ்டத்தால் டெல்லி அணி வென்றதாக கூறியிருக்கிறார்.

Pant

இது குறித்து பேசிய அவர், எங்கள் அணியின் முன்வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடி சேர்த்தார்கள். இந்த ஆடுகளத்தில் இது ஒரு நல்ல இலக்கு என்று தான் நினைக்கின்றேன். இந்த போட்டியில் எங்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறோம்.

அடிப்படையான விஷயங்களை நாம் சரியாக செய்ய வேண்டும். அடிப்படையை சரியாக செய்தாலே நமக்கு எதிர்பார்க்க முடிவு கிடைக்கும். இன்றைய போட்டியில் கூட நாங்கள் தொடக்கத்தில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆனால் டெல்லி அணியின் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை தலைக்கீழ் மாற்றியது.

ஸ்டெப்ஸ் ஆஸ்டோஷ் சர்மா மற்றும் நிகம் ஆகியோர் அபாரமாக விளையாடி போட்டியை எங்களிடம் இருந்து கவர்ந்து சென்று விட்டார்கள். இந்த ஆடுகளத்தில் பவுலர்களுக்கும் சாதகமான அம்சங்கள் இருந்தது. ஆனால் நாங்கள் அடிப்படையான சில விஷயங்களை சரியாக செய்யவில்லை என்று நினைக்கின்றேன்.

இந்த போட்டியில் கடும் நெருக்கடியில் நாங்கள் சந்தித்தோம். எனினும் இந்த ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்களை நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டம் என்பது ஒரு முக்கிய பங்காற்று இருக்கிறது. குறிப்பாக மோகித் சர்மா பாடில் பந்து படவில்லை என்றால் நான் நிச்சயமாக ஸ்டம்பிங் செய்து இருப்பேன். இது போன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். ஆனால் இது குறித்து எல்லாம் நாம் கவனம் செலுத்தக் கூடாது. ஆனால் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்வோம்.

Story first published: Monday, March 24, 2025, 23:59 [IST]
Other articles published on Mar 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+