Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- டெல்லியை பழிவாங்குவாரா ரிஷப் பண்ட்.. வெற்றியுடன் தொடங்குவாரா அக்சர்.. பிளேயிங் XI என்ன?

விசாகப்பட்டினம்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி, லக்னோ அணிகள் மோதும் ஆட்டம் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேசிய டெல்லி அணியின் புதிய கேப்டன் அக்சர் பட்டேல், முதலில் நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கின்றோம்.

பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் நாங்கள் எந்தவித ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. இதனால் தான் நாங்கள் முதலில் பந்து வீசுகின்றோம். நான் ரிஷப் பண்டிற்கு எதிராக பலமுறை விளையாடி இருக்கின்றேன். அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

axar patel

என்னை பற்றி அவருக்கு நன்றாக தெரியும். நாங்கள் எந்த ட்ரிக்ஸ்களை வைத்திருப்போம் என்றும் அவருக்கு தெரியும். டெல்லி அணிக்காக அவர் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். தற்போது எங்கள் அணி நல்ல பேலன்ஸ் உடன் இருக்கின்றது. நான் டெல்லி அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடி இருக்கின்றேன்.

நான் எங்கள் அணியின் நிர்வாக குழுவில் இருந்தேன். நான் ஒரு லீடர் போல் யோசித்து செயல்பட வேண்டும். எங்கள் அணியில் டுபிளசிஸ், ஸ்டெப்ஸ், ஸ்டார்க் மற்றும் பிரேசர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்று அக்சர்பட்டேல் கூறினார். இதை தொடர்ந்து பேசிய லக்னோ அணி கேப்டன் பண்ட், நானும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்யலாம் என இருந்தேன். இது ரன்குவிப்புக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கிறது.

இங்கு நாங்கள் நன்றாக பேட்டிங் செய்து நல்ல இலக்கை நிர்ணயிக்க முடியும். நான் டெல்லி அணிக்காக தான் என் வாழ்க்கை முழுவதும் விளையாடி இருக்கின்றேன். தற்போது அந்த அணிக்கு எதிராக விளையாடுவது கொஞ்சம் உணர்ச்சி வசமாக தான் இருக்கின்றது. இந்த தொடருக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராக இருக்கின்றோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் சிறப்பான முறையில் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். எங்கள் அணியில் மார்க்கம்,மிட்செல் மார்ஸ், நிக்ரோஸ் பூரான் மற்றும் டேவிட் மில்லர் என நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

லக்னோ அணி பிளேயிங் லெவன்: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த், டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய்

டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்

Story first published: Monday, March 24, 2025, 19:28 [IST]
Other articles published on Mar 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+