For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH vs DC: சன்ரைசர்ஸ்க்கு படுதோல்வி! 16வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டிய டெல்லிக்கு 2வது வெற்றி

விசாகப்பட்டினம்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பலம் வாய்ந்த ஒரு அணியாக கருதப்பட்ட சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிட்செல் ஸ்டார்க் அனைவரின் கனவையும் சுக்குநூறாக உடைத்தார்.

SRH vs DC

தன்னுடைய அனல் பறக்கும் பந்துவீச்சை மிட்செல் ஸ்டார்க் வெளிப்படுத்த அதனை எதிர்கொள்ள முடியாமல் சன்ரைசர்ஸ் வீரர்கள் தடுமாறினர். அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் ரன் அவுட் ஆக, டிராவிஸ் ஹெட் 22 ரன்களிலும், இஷான் கிசன் இரண்டு ரன்களிலும், நிதிஷ்குமார் டக் அவுட் ஆகியும் ஸ்டார்க் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனை அடுத்து சன்ரைசர்ஸ் சனி தடுமாற அன்கிட் வர்மா மற்றும் கிளாசன் ஜோடி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அங்கீத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு சிக்ஸர்கள், ஐந்து பௌண்டரிகள் அடங்கும். ஹென்றிச் கிளாசன் 19 பந்தில் 32 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவரில் 163 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டெல்லி பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளையும் குல்தீப் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதை அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் ஜேக் பிரேசர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ரன்கள் எடுத்தார்.

எனினும் அனுபவ வீரரான டுப்ளிசிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். இதேபோன்று அபிஷேக் போரெல் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க, ராகுல் 5 பந்துகளில் 15 ரன்களும் ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 21 ரன்களும் எடுக்க டெல்லி அணி 16 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் தற்போது 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி தற்போது இரண்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

Story first published: Sunday, March 30, 2025, 19:02 [IST]
Other articles published on Mar 30, 2025
English summary
IPL 2025 DC vs SRH- Delhi Capitals Beat Sunrisers by 7 wickets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+