Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: கடைசி 2 ஓவரில் ஆட்டம் மாறிவிட்டது..2 முக்கிய வீரர்கள் இல்லாமல் தோல்வி-DC கேப்டன் டுபிளசிஸ்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. முதலில் பந்து வீசிய டெல்லி அணி 18 ஓவர் வரை அபாரமாக செயல்பட்ட நிலையில் கடைசி இரண்டு ஓவரில் 48 ரன்களை விட்டுக் கொடுத்தது.

இது ஆட்டத்தில் போக்கை அப்படியே மாற்றி விட்டது. இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அணியின் தற்காலிக கேப்டன் டுபிளசிஸ் இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் இன்று தோல்வி அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

Faf duplessis

இது குறித்து பேசிய அவர், நாங்கள் ஆடுகளத்தில் அபாரமாக பில்டிங் செய்தோம். எங்கள் வீரர்கள் கடுமையான போராடினார்கள். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. நாங்கள் கடைசி இரண்டு ஓவர்களில் ஆட்டத்தையே எங்கள் கையில் இருந்து தவற விட்டோம்.

கிரிக்கெட்டில் உத்வேகம் என்பது உண்மையான ஒரு விஷயம். யார் அந்த உத்வேகத்தை பெறுகிறார்களோ. அவர்களை வெற்றி பெறுவார்கள். கடைசி இரண்டு ஓவரில் கிட்டத்தட்ட 5 ரன்கள் அடித்தார்கள். இதன் மூலம் முதல் 18 ஓவர்களில் நாங்கள் செய்த உழைப்பு அனைத்தும் வீணாகி விட்டது. அதில் கிடைத்த உத்வேகத்தை பயன்படுத்தி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு எங்களுடைய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இன்று ரிஸ்வி நன்றாக விளையாடினார். எங்கள் அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இன்று ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் நாங்கள் மிகவும் சுமாராக தான் விளையாடினோம். இது எங்களுடைய ஒட்டுமொத்த சீசனையும் பிரதிபலிக்கிறது என நினைக்கின்றேன். எங்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சு சில தவறுகளை செய்வதால் கடைசி ஆறு ஏழு போட்டிகளில் தோல்வியை தழுவினோம்.

இதுபோன்ற ஆடுகளத்தில் அக்சர்பட்டேல் மற்றும் மிட்செல் சாண்ட்னர் போன்ற வீரர்கள் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு எங்களுக்கு கொடுத்தது. சாட்ணர் பந்து வீசிய விதத்தை பார்த்தோம். இந்த ஆடுகளத்தில் அக்சர் பட்டேல் உலகத்தரம் வாய்ந்த வீரராக இருந்திருப்பார் என்று டுபிளசிஸ் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 21, 2025, 23:46 [IST]
Other articles published on May 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+