Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL போட்டிக்கு லீவ் போட்ட ராகுல்.. தர்பார் வில்லன் தந்த குட் நியூஸ்.. டெல்லி வீரர்கள் தந்த சர்பரைஸ்

பெங்களூர்: ஐபிஎல் தொடரிலே மிகவும் சர்ச்சை வாய்ந்த அணி உரிமையாளர் என்றால் அது சஞ்சீவ் கோயங்கா தான். சஞ்சீவ் கோயங்கா லக்னோ அணியை வாங்குகிறார் என்று சொன்னவுடனே, நிச்சயம் பிரச்சனை இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் இவருடைய தம்பி ஹர்ஷ் கோயங்கா நமது தல தோனியை கடுமையாக சமூக வலைத்தளத்தில் கருத்தை சாடி பதிவிட்டார்.

இந்த சூழலில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு லக்னோ அணி தோல்வியை தழுவிய பிறகு அந்த அணியின் கேப்டன் ராகுலை அவர் கடுமையாக சாடினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் லக்னோ அணியை விட்டு வெளியேறிய ராகுல் தற்போது டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

KL Rahul and Athiya

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் டெல்லி அணியில் இருந்த ரிஷப் பண்ட் தற்போது லக்னோ அணிக்கு மாறியிருக்கிறார். இந்த தருணத்தில் தான் முதல் லீக் போட்டியில் லக்னோ அணி 209 ரன்களை எடுத்தது. இதை அடுத்து பந்துவீச்சிலும் விரைவாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியும் டெல்லி அணியிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது.

இந்த சூழலில் பயிற்சியாளர் மற்றும் அணி கேப்டனின் சஞ்சீவ் கோயங்கா, களத்திலே பேசினார். இது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த தருணத்தில் தான் போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று வீரர்களுடன் உரையாடி இருக்கிறார். அதில், "இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது."

"நான் அதை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன். பந்து வீச்சி மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்படும். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். நாம் ஒரு இளம் அணி. எனவே நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராகுவோம்."

"அந்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் இன்று ஏமாற்றமான முடிவு தான். எனினும் நல்ல போட்டியாக அமைந்தது என்று கோயங்கா கூறினார்." முதல் போட்டியிலே கோயங்கா வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூம் வந்து பேசியதை வெளிநாட்டு வீரர்கள் சிலர் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 25, 2025, 14:15 [IST]
Other articles published on Mar 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+