Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

29 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த டெல்லி.. கம்மின்ஸ் மிரட்டல் பவுலிங்.. மானத்தை காப்பாற்றிய ஸ்டப்ஸ்

ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டு விளையாடியது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி வீரர்கள் மோசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி சென்றனர்.

DC vs SRH

ஆட்டத்தின் முதல் பந்திலேயே கருண் நாயர், இசான் கிஷனிடம் கேட்ச் ஆகி கோல்டன் டக் ஆனார். இதேபோன்று டுபிளசிஸ் மூன்று ரன்களிலும், அபிஷேக் போரெல் எட்டு ரன்களிலும் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்சர் பட்டேல் ஆறு ரன்களிலும், நட்சத்திர வீரர் கே எல் ராகுல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இதன் மூலம் டெல்லி அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதேபோன்று விபராஜ் நிகம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி மிகவும் மோசமான ஒரு நிலையில் இருந்தது. அப்போது களத்திற்கு வந்த தென்னாப்பிரிக்க வீரர் டிஸ்டன் ஸ்டெப்ஸ் மற்றும் அஸ்டோஸ் சர்மா ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.

அஸ்டோஸ் சர்மா 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்கும். இதன் மூலம் டெல்லி அணி கௌரவமான இலக்கை எட்டியது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளை வித்திருக்கிறார். டெல்லிய அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 5, 2025, 21:40 [IST]
Other articles published on May 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+