டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லிய அணி ஆரம்ப கட்டத்தில் தொடர் வெற்றிகளை பெற்று வந்தாலும், தற்போது நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. அதுவும் முக்கியமான கட்டத்தில் இந்த தோல்விகள் வருவதால் டெல்லி அணிக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது புள்ளி பட்டியலில் டெல்லி அணி நான்காவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஆறு வெற்றி நான்கு தோல்விகளை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல், நாங்கள் பவர் பிளேவில் சரியாக செயல்படவில்லை.

கூடுதலாக 20 ரன்கள் கொடுத்து விட்டோம் என்று நினைக்கின்றேன். நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் சரியான ஷாட்களை ஆடவில்லை. சிறிய முறையில் அவுட்டாகி விட்டோம். பவர் பிளேக்கு பிறகு கொல்கத்தா அணியை நாங்கள் நல்ல முறையில் ரன் அடிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தினோம்.
நாங்கள் இன்று சரியாக செயல்படவில்லை. குறைந்தபட்சம் ஒன்று மூன்று வீரர்கள் நன்றாக அடித்து இருந்தால் வெற்றியைப் பெற்று இருக்கலாம். ஆனால் இலக்கிற்கு அருகே வந்து தான் தோல்வியை தழுவி இருக்கின்றோம். களத்தில் பொறுப்பான ஆட்டத்தை ஒவ்வொரு வீரர்களும் வெளிப்படுத்த வேண்டும்.
விப்ராஜ் ரன் குவித்து வந்தபோது நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
கடைசி வரை ஆஸ்டோஸ் சர்மா நின்று இருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம் சில சமயம் அதிர்ஷ்டம் உங்களுக்கு எதிராக வேலை செய்யலாம். நான் பில்டிங் செய்யும் போது காயம் அடைந்து விட்டேன்.
எனவே நான் பேட்டிங் செய்யும்போது எனக்கு அது வலியை கொடுத்தது. தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு மூன்று அல்லது நான்கு நாட்கள் கேப் இருக்கின்றது. இதில் நான் மீண்டு வந்து விடுவேன் என்று நம்புகிறேன் என்று அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.