For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: வெளியே போடா! திக்வேஷ் ரதிக்கு ஓவர் திமீர்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட அபிஷேக் சர்மா

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பல திறமை வாய்ந்த புதுமுக வீரர்கள் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு பவுலர் என்றால் லக்னோ அணிக்காக விளையாடும் டிக்வேஷ் ரதிதான். பாகவதர் போல் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு களத்தில் திமிர் பிடித்த ஒரு வில்லன் போல் செயல்படுகிறார் 25 வயதான டிக்வேஸ் ரதி.

டெல்லி பிரீமியர் லீக் தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதில் பத்து போட்டியில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேலும் ஒரு ஓவருக்கு வெறும் ஏழு ரன்கள் மட்டும் தான் அவர் கொடுத்திருந்தார். இதனால் திக்வேஸ் ரதியை 30 லட்சம் ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.

Digvesh Rathi and Abhishek sharma

தற்போது 12 போட்டிகள் விளையாடியுள்ள திக்வேஸ் ரதி, ஐபிஎல் தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஒரு ஓவருக்கு எட்டு ரன்ளை மட்டுமே அவர் கொடுத்திருக்கிறார். முக்கியமான கட்டத்தில் நெருக்கடியாக பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் திக்வேஸ் ரதி வல்லவராக இருக்கிறார்.

ஆனால் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைத்து விட்டு நோட் புக் செலிப்ரேஷனில் அவர் ஈடுபடுவது பெரும் சர்ச்சையாக இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை பிசிசிஐ அவருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து அபராதம் விதித்திருக்கிறது. இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திக்வேஷ் ரதி ஒரு அநாகரிகமான செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.

அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடி 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தபோது திக்வேஷ் பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்தார்.

அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் திக்வேஷ் ரதி கையை காண்பித்து வெளியே போ என்பது போல் கத்தினார். அதனை தொடர்ந்து தன்னுடைய நோட்புக் செலிப்ரேஷனிலும் அவர் ஈடுபட்டார். பின் அபிஷேக் ஷர்மாவை பார்த்து ஏதோ திட்ட கடுப்பான அபிஷேக் ஷர்மா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திக்வேஷ் ரதி அநாகரீகமாக செயல்பட நடுவர் இருவரையும் தடுத்து அமைதி படுத்தினார். திக்வேஷ் திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் களத்தில் அநாகரீகமாக செயல்படுவதாக ரசிகர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது டிக்வேஸ்க்கு மேலும் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்அநாகரீகமாக

இதனிடையே போட்டி முடிவடைந்த உடன் லக்னோ அணியின் பயிற்சியாளர்களுடன் அபிஷேக் ஷர்மா, திக்வேஷ் ரதி குறித்து புகார் அளித்தார். அப்போது திக்வேஷ், நான் என்னுடைய கொண்டாட்டத்தில் மட்டும் தான் ஈடுபட்டதாக விளக்கம் அளித்தார். எனினும் அபிஷேக் ஷர்மா அதனை ஏற்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட லக்னோ அணி துணைப் பயிற்சியாளர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

Story first published: Monday, May 19, 2025, 23:43 [IST]
Other articles published on May 19, 2025
English summary
IPL 2025- Digvesh Rathi and Abhishek sharma fight created controversy in LSG vs SRH
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+