Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: நடப்பு சீசனில் முதல் முறை.. லக்னோ அணி பவுலர் திக்வேஸ் ரதி அசத்தல்.. ஸ்ரேயாஸ்-க்கு பதிலடி

தர்மசாலா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ, பஞ்சாப் அணிக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தர்மசாலாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிராப்சிம்ரன்சிங் அபாரமாக விளையாடி ஆறு பவுண்டரி ஏழு சிக்ஸர் விளாசி 48 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். ஜோஸ் இங்கிலீஷ் 14 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

PBKS vs LSG

இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் லக்னோ வீரர் திக்வேஸ் ரதி, பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்டத்தின் 13 வது ஓவரில் திக்வா வீசிய முதல் பந்தை ஸ்ரேயாஸ், சிக்ஸர் அடித்தார். இதை அடுத்து இரண்டாவது பந்துவீச்சு ஃபுல் லெங்க்த்தில் ஆப் சைடுக்கு வெளியே வீச அதனை ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்க முற்பட்டபோது, அது மாயங் யாதவிடம் கேடச் ஆக மாறியது.

இதன் மூலம் நடப்ப ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் முதல் முறையாக சுழற் பந்துவீச்சாளர் பவுலிங் தனது விக்கெட்டை பறி கொடுத்திருக்கின்றார் ஸ்ரேயாஸ், தனது முதல் பந்தில் சிக்சர் அடித்ததார். இரண்டாவது பந்தில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தியவுடன் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டோகிராப் போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

திக்வேஸ் ரதி நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடி மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். இது அவருடைய சராசரி 29 என்ற அளவில் இருக்கிறது. எக்னாமி 8 என்று அளவில் உள்ளது. ஸ்ரேயாஸ், முதல் முறையாக சுழற் பந்துவீச்சு பவுலிங் ஆட்டமிழந்ததன் மூலம் அவர் இந்த சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக எவ்வளவு அபாரமாக விளையாடி இருக்கிறார் என்பது இது காட்டுகிறது.

Story first published: Sunday, May 4, 2025, 23:36 [IST]
Other articles published on May 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+