Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஒவ்வொரு நபரும் ஐபிஎல் அணி உரிமையாளர் என்று நினைத்து கொள்கிறார்கள்.. கொந்தளித்த தோனி!

மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் மற்றும் ரீடென்ஷன் தொடர்பான விவாதங்கள் மற்றும் கணிப்புகள் குறித்து சிஎஸ்கே நட்சத்திர வீரர் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று கூறியுள்ள அவர், ரசிகர்களின் கணிப்புகளை பார்க்கும் போது வினோதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நாளை வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஒவ்வொரு அணியும் யார் யாரை ரீடெய்ன் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.

ipl 2025 csk ms dhoni


இந்த நிலையில் ஐபிஎல் ரீடென்ஷன் தொடர்பான விவாதங்கள் நடப்பது குறித்து சிஎஸ்கே நட்சத்திர வீரர் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி பேசுகையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் தன்னை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர் என்று நினைத்து முடிவு எடுக்கிறார்கள். அவர்கள் எந்த வீரரை வாங்க விரும்புகிறார்கள், எந்த வீரரெல்லாம் ரிலீஸ் செய்யப்பட வேண்டும், எந்த வீரரை வாங்க வேண்டும் என்று அனைத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஐபிஎல் ஏலம் வித்தியாசமான முறையில் இயங்குவதாகவே நினைக்கிறேன். ஏனென்றால் ஐபிஎல் ஏலத்தில் நிர்வாகிகள் பங்கேற்கும் போது, எந்த நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதனால் ரசிகர்கள் அளிக்கும் பரிந்துரைகளை பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும். எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்பதை எல்லாம் கணிப்பார்கள்.

ஒவ்வொரு அணியின் கைகளிலும் உள்ள பர்ஸ் தொகையை பொறுத்து தான், எந்த வீரர் எந்த அணிக்கு போவார் ஏலத்தில் அறிய முடியும். அதேபோல் வீரர்கள் நினைக்கும் அணிக்கும் செல்வது கடினமானது. ஆனால் அந்த வீரர்களை வாங்கும் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதுதான் ஐபிஎல் தொடரின் அழகு. இது ட்ரேட் முறையில் அல்லாமல், ஏலம் நடத்தப்படுகிறது.

ஏனென்றால் ஏலம் நடத்தப்பட்டால், எந்த வீரர் வேண்டுமானாலும் எந்த அணிக்கும் சென்று விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார். தோனியின் இந்த விமர்சனம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது. மேலும் சிஎஸ்கே அணி தரப்பில் தோனி தக்க வைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அவர் வழக்கம் போல் பதில் அளிக்கப்படவில்லை.

Story first published: Wednesday, October 30, 2024, 8:02 [IST]
Other articles published on Oct 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+