Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

40 வயதில் சம்பவம் செய்த டுபிளசிஸ்.. என்ன செய்வது என தெரியாமல் முழிக்கும் ஆர்சிபி.. குழப்பத்தில் கோலி

பெங்களூர் : மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டுப்ளிசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. 40 வயதில் இந்த தொடரில் களமிறங்கிய டுபிளசிஸ் 12 போட்டிகளில் விளையாடி 450 ரன்கள் குவித்து இருக்கிறார்.

இதில் அதிகபட்சமாக 92 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் நான்கு அரை சதம் அடங்கும். டுபிளசிஸ் ஸ்ட்ரைக் ரேட் 145 என்று அளவிலும், அவருடைய சராசரி 36 என்ற அளவில் இருக்கிறது. இந்த சூழலில் கேப்டன்சியும் டுப்ளசிஸ் சிறப்பாக செய்து கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார்.

ipl 2025 faf duplessis rcb virat kohli cricket


தற்போது டுபிளசிஸ்க்கு 40 வயதாகி விட்டது. இதனால் ஐபிஎல் 2025 ஆம் சீசனில் ஆர்சிபி அணியை அவரால் தலைமை தாங்கி வழிநடத்த முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஆர்சிபி அணி நிர்வாகம் டுபிளசிசை வெளியே அனுப்பி விடலாம் என்ற முடிவில் இருந்தது. மேலும் புதிய கேப்டனாக வேறொரு ஸ்டார் வீரரையும் தேர்ந்தெடுக்கவும் ஆர் சி பி அணி நிர்வாகம் யோசித்தது.

இந்த சூழலில் டுபிளசிஸ் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் அணியை வெற்றிக்கு வழி நடத்தி இருப்பதால், தற்போது என்ன செய்ய போகிறோம் என தெரியாமல் ஆர் சி பி அணி முழித்து கொண்டு வருகிறது. மும்பை, சிஎஸ்கே போன்ற அணிகள் எல்லாம் பிராவோ, பொலார்ட் போன்ற வீரரை வயதை காரணம் காட்டி நீக்கிவிட்டது. இதே பாணியை தாங்களும் கடைப்பிடிக்கலாமா இல்லை கோப்பை வென்றவரை அணியை விட்டு நீக்குவது சரியா என்று சந்தேகத்தில் ஆர்சிபி அணி இருக்கிறது.

இந்த சூழலில் 40 வயதை டுபிளசிஸ் தொட்டுவிட்டதால், அவருக்கு பெரிய அளவில் பணம் கொடுத்து ஏலத்தில் தேர்வு செய்ய எந்த அணியும் ஆர்வம் காட்டாது. இதனால் டுபிளசிசை விடுவித்து ஆர்டிஎம் கார்ட் மூலம் மீண்டும் குறைந்த விலையில் மீண்டும் வாங்கலாமா என்ற யோசனையில் ஆர் சி பி இருக்கிறது. ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் டுபிளசிஸ்க்கு 41 வயதாகிவிடும்.

இதனால் வயதை காரணம் காட்டி டுபிளசிசை நீக்கலாமா இல்லை தக்க வைத்துக் கொள்ளலாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய டுபிளசிஸ் 15 போட்டிகளில் 438 ரன்கள் குவித்து இருந்தார். இதேபோன்று ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் 14 போட்டியில் விளையாடிய டுப்ளசிஸ் ஆர்சிபி அணிக்காக 730 ரன்கள் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 7, 2024, 16:52 [IST]
Other articles published on Oct 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+