Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK அணியில் வெறும் 2 மாற்றம்.. மொத்தமாக மாறிய சென்னை அணி.. இதை முதலில் பண்ணிருந்தா என்னவாம்?

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி ஒன்பது போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது தான் மூன்றாவது வெற்றியே பெற்றிருக்கிறது. சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது.

ரசிகர்கள் பலரும் சிஎஸ்கே அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் சிஎஸ்கே அணி எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் தொடர் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் கடும் அடியை சிஎஸ்கே அணி சந்தித்ததால் தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணிகள் இடம்பெற்று இருந்த இளம் வீரர்கள் இருவர் அபாரமாக விளையாடி ஆட்டத்தையே தலைக்கீழ் மாற்றி இருக்கிறார்கள்.

IPL 2025- Fans Bashing CSK Despite winning the 3rd game for this reason

குறிப்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய அறிமுக வீரர் உர்வில் பட்டேல் 11 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு இமாலய சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் சிஎஸ்கே அணி பவர் பிளேவில் பெரிய ஸ்கோரை எட்டியது. இதேபோன்று நடுவரிசையில் களமிறங்கிய டிவால்ட் பிரவீஸ் தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக வைபவ் அரோரா வீசிய ஒரே ஓவரில் 30 ரன்கள் பிரவீஸ் குவித்தார். இதன் மூலம் 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், சிஎஸ்கே அணி இளம் வீரர்களை அதிக அளவு சேர்த்து இருப்பதன் மூலம் போட்டியே தற்போது தலைக்கீழ் மாறி இருக்கிறது.

சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 60 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் இளம் வீரர்கள் கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் அதிரடி காட்டி வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இந்த மாற்றத்தை சிஎஸ்கே அணி ஆரம்பத்திலேயே செய்திருந்தால் இந்த சீசனிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்கலாம். ஆனால் சிஎஸ்கே அணி பட்டு தான் திருந்தும் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் இந்த சீசனில் கற்றுக் கொண்ட பாடத்தை அடுத்த சீசனில் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, May 7, 2025, 23:49 [IST]
Other articles published on May 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+