Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Memes- இனி நான் தான் கேப்டன்.. இது என்னுடைய அணி.. பாமக- உடன் ஓப்பிட்டு சிஎஸ்கே மீம்ஸ்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனை பாமக கட்சியுடன் மீம்ஸ் போட்டு ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். நேற்று பாமக கட்சித் தலைவராக இருந்த அன்புமணி நீக்கப்பட்டு அந்த பொறுப்பை தாமே இனி ஏற்றுக்கொள்கிறேன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

IPL Memes

இது அரசியல் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று மாலையே, தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக திரும்பியதை அடுத்து இந்த நிகழ்வை மீம்ஸ் போட்டு சிஎஸ்கே அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இனி நான் தான் கேப்டன் என்றும், இது என்னுடைய அணி. நானே இதை பார்த்துக்கொள்கிறேன் என்று ராமதாஸ் சொன்ன வசனத்தை போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

அதேபோன்று இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கேவும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் விளையாடுகிறது. தோனி கேப்டனாக பொறுப்பேற்றதை கொல்கத்தா ரசிகர்கள் நாங்க இன்று விளையாடும் போது தான் தோனி கேப்டனாக வரனுமா என்று பீல் பண்ணுவது போல் மீம்ஸ் போட்டு வருகின்றனர். தோனி கேப்டனாக திரும்பியதை அடுத்து மற்ற அணிகள் எல்லாம் ஷாக் ஆகி நிற்பது போல பிகில் படத்தின் ஒரு சீனை போட்டு மீம்சாக ரசிகர்கள் கிண்டல் செய்து உள்ளனர்.

IPL Memes

இதே போன்று நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக ஆர் சி பி அணி சின்னசாமி மைதானத்தில் தோல்வியை தழுவியது. இதில் மும்பை அணிக்காக விளையாடிய டிம் டேவிட்டி ஆர் சி பி அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஏலத்தின் போது ஆர்சிபி அணிக்காக விளையாடிய வில் ஜாக்ஸை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. வில் ஜாக்சை ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தாத ஆர் சி பி நிர்வாகிகளை கிண்டல் செய்யும் விதமாக மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி எழுந்து சென்று கைகுலுக்கி வந்தார்.

ஆனால் வில் ஜாக்ஸ் தற்போது சரியாக விளையாடாத நிலையில் டிம் டேவிட் ரன்களை குவித்து வருகிறார். இதனை கிண்டல் செய்யும் விதமாக ஆர்சிபி ரசிகர்கள், நீங்கள் கொடுத்த பையன் சூப்பரா பெர்பார்ம் பண்றான். யாரு உங்களுக்கு என்ன உறவு வேண்டும் என்று சிங்கம் படம் டயலாக்கை போட்டுள்ளனர். அதற்கு மும்பை அணி சித்தப்பா முறை வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

ரசிகர்கள் சிங்கப்பூர் சித்தப்பா என்று தான் டிம் டேவிட்டை அழைப்பதை குறிப்பிட்டு இந்த மீம்ஸை போட்டுள்ளனர். அதேபோன்று ஆர்சிபி அணி ஐபிஎல் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடும். ஆனால் ஐபிஎல் இறுதியில் தொடர் தோல்விகளை சந்திக்கும். இதனை மீம்ஸ் போடும் விதமாக ஆர்சிபியை அண்டர்டேக்கர் போலவும்,தொடர் முடியும்போது சவப்பெட்டியில் மற்ற அணிகள் ஆர்சிபியை தூக்கி செல்வது போலவும் மீம்ஸ் போட்டுள்ளனர்.

Story first published: Friday, April 11, 2025, 14:39 [IST]
Other articles published on Apr 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+