For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK vs MI: “தோனிக்கே வாய்ப்பு இல்லை.. இதைப் பார்க்கவா வந்தோம்”.. நொந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை: 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்வதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். 8 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்தது.

அப்போது வெற்றி உறுதி என்ற நிலையில் தோனி களத்திற்கு வந்தார். எப்போதும் போல அவர் வெற்றிக்குத் தேவையான ரன்களை ஒரு சிக்ஸ் அடித்து எடுத்து, ஆட்டத்தை முடித்து வைப்பார் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

IPL 2025 Fans not happy as MS Dhoni didn t scored a run in CSK vs MI Match

ஆனால், மறுபுறம் இருந்த ரச்சின் ரவீந்திரா கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைத்தார். அப்போது தோனி 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் சிஎஸ்கே நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதே சமயம் தங்களின் விருப்பமான வீரர் தோனி ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸ் அடிப்பதை பார்ப்பதற்காக காத்திருந்த ரசிகர்கள் ரச்சின் ரவீந்திராவின் செயலால் ஏமாற்றம் அடைந்தனர். "சிஎஸ்கே அணியில் கடைசி ரன்னை அடிக்க தோனிக்கு வாய்ப்பு இல்லை" என புலம்பினர். இந்த போட்டி முடிந்தவுடன் தோனி ரச்சினிடம் ஏதோ பேசினார்.

"நான் அடிக்க வேண்டிய சிக்ஸை நீ அடித்து விட்டாய்" என தோனி, ரச்சினிடம் கூறியதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது சொந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அது உண்மையல்ல என்றாலும், தோனி ஒரு ரன்னாவது எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர். இந்தப் போட்டியின் வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தனது 2025 ஐபிஎல் பயணத்தை துவக்கியுள்ளது.

செய்தி சுருக்கம்:

  • 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வென்றது.
  • கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரச்சின் ரவீந்திரா முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
  • தோனி பேட்டிங் செய்ய வருவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள், ரவீந்திராவின் சிக்ஸால் ஏமாற்றம் அடைந்தனர்.
  • தோனி, ரவீந்திராவிடம் தான் அடிக்க வேண்டிய சிக்ஸை அவர் அடித்துவிட்டதாக கூறியதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
  • இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
Story first published: Monday, March 24, 2025, 7:08 [IST]
Other articles published on Mar 24, 2025
English summary
IPL 2025: Fans not happy as MS Dhoni didn’t scored a run in CSK vs MI Match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+