Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: கடவுளே! அப்போ தோனிக்கு Farewell கிடையாதா? பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்த ரசிகர்கள்

சென்னை: ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசன் தோனிக்கு கடைசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தோனிக்கு தற்போது 43 வயது ஆகிவிட்டது. இனி அடுத்த சீசனில் விளையாடும் போது தோனிக்கு 44 வயது ஆகி 45 நெருங்கிவிடும்.

இதனால் நடப்பு சீசன் தான் தோனிக்கு கடைசியாக இருக்கும் என்றும், இதனால் சென்னையில் அவருக்கு பிரம்மாண்ட பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணி இம்முறை மிகவும் மோசமாக விளையாடியது.

IPL 2025

இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 9 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருக்கிறது. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் தோனிக்கு வயதாகதால், அவர் அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து யோசிக்காமல் அணியை விட்டு விலக முடிவு எடுத்ததாக கூறப்பட்டது. இந்த தருணத்தில் தற்போது இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது நடைபெறும் என்ற தகவல் தெரியவில்லை. ஒரு வேலை செப்டம்பர் மாதம் நடைபெற்றால், அதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றது. அதுவரை தோனி உடல் தகுதியுடன் இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி தோனிக்கு ஃபேர்வெல் நிகழ்ச்சி கிடைக்குமா என்று ரசிகர்கள் கலக்கமடைந்திருக்கிறார்கள்.

இதனால் எஞ்சிருக்கும் போட்டிகளை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் தோனிக்கு பிரியாவிடை அளித்து அவரை வழி அனுப்ப முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தோனிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பிரியாவிடை அளிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர். ஆனால் இம்முறை மீண்டும் போர் பதற்றம் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தடை பட்டிருப்பதால் தோனிக்கு மீண்டும் பிரியாவிடை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

Story first published: Friday, May 9, 2025, 21:41 [IST]
Other articles published on May 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+