IPL 2025:சிஎஸ்கே அணிக்காக அதிவேக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியல்..சிக்சர் அடித்ததில் சிஎஸ்கே சாதனை
அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்து இருக்கிறது. இதன் மூலம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த சூழலில் தென்னாப்பிரிக்கா வீரர் பிரவீஸ் சிஎஸ்கேவுக்கு மாற்று வீரராக வந்து பட்டையை கிளப்பி இருக்கிறார்.
குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பிரவீஸ் 19 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் பிரவீஸ் 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். முதல் போட்டியில் 25 பந்துகளில் 42 ரன்களும், இரண்டாவது போட்டியில் 26 பந்துகளில் 32 ரன்களும், மூன்றாவது போட்டியில் டக் அவுட்டும் ஆனார்.

பிரவீஸ் நான்காவது போட்டியில் 25 பந்துகளில் 53 ரன்களும், ஐந்தாவது போட்டியில் 25 பந்துகளில் 42 ரன்களும், ஆறாவது போட்டியில் 23 பந்துகளில் 57 ரன்களும் பிரவீஸ் அடித்துள்ளார். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரவீஸ் இணைந்து இருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரை சதம் கடந்தார். 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே வீரர் மோயின் அலி 19 பந்துகளில் அரை சதம் அடித்தார்.இதேபோன்று 2023 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரஹானே 19 பந்துகளில் அரைசதம் கடந்து இருந்தார்.
இதேபோன்று நடப்பு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் பிரவீஸ் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார். 21 சிக்ஸர் உடன் சிவம் துபே முதலிடத்திலும், 17 சிக்சருடன் பிரவீஸ் இரண்டாவது இடத்திலும், 12 சிக்ஸ்டருடன் தோனி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
116 சிக்சர் உடன் ஆயுஸ் மாத்ரே நான்காவது இடத்திலும், 10 சிக்சர் உடன் ஜடேஜா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் மட்டும் சிஎஸ்கே அணி 15 சிக்ஸர்கள் விளாசியது. இதன் மூலம்நடப்பு சீசனில் சிஎஸ்கே அடித்த அதிக சிக்ஸர்கள் இதுவாகும். அது மட்டுமில்லாமல் நடப்பு தொடரில் சிஎஸ்கே அணி 100 சிக்ஸர்களை அடித்து இருக்கிறது.இதன் மூலம் ஏழு முறை ஒரே சீசனில் 100 சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை சிஎஸ்கே பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் மும்பை அணி 10 முறை ஒரே சீசனில் 100 சிக்சர் அடித்து முதல் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications