Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பைனலுக்கு முன்பு ஸ்ரேயாஸ் ஐயரை பழிவாங்கிய பிசிசிஐ.. இனி எப்படி விளையாட முடியும்

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாத அணி இரண்டும் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.இதனால் புதிய அணி ஒன்று எப்படியும் சாம்பியன் பட்டத்தை இன்று இரவு வென்று விடும். விராட் கோலி 18 ஆண்டுகளாக rcb அணிக்கு விளையாடி ஐபிஎல் கோப்பையை வெல்ல போராடி வருகிறார்.

அவருக்கு இந்த கோப்பையை பெற்றுத்தர ரஜத் பட்டிதார் தலைமையிலான அணி தீவிரமாக முயற்சி செய்யும். அதே சமயம் ஸ்ரேயாஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையில் வெல்ல தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்த தருணத்தில் குவாலிஃபையர் போட்டியின் போது மும்பை அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் தனி ஆளாக நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Shreyas Iyer

ஆனால் அன்று மழை பாதிப்பு இருந்ததால் போட்டி மிகவும் தாமதமாக முடிவடைந்தது. இந்த சூழலில் இறுதி போட்டிக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருந்த நிலையில், ஸ்ரேயாஸ் அதனை முழுவதும் ஓய்வுக்காக பயன்படுத்த நினைத்திருந்தார். ஆனால் பிசிசிஐ ஸ்ரேயாஸ் ஐயரை வற்புறுத்தி இறுதிப் போட்டிக்கான தயாரிப்பு பணிகளில் தாங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும் இறுதிப் போட்டிக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பு கோப்பை அறிமுக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்ரேயாஸ் பிசிசிஐ அழைத்து இருக்கிறது. இதனால் வெறும் 4 மணி நேரம் தான் இரவில் தூங்கியதாக ஸ்ரேயாஸ் தெரிவித்திருக்கிறார். இறுதிப்போட்டிக்கு முன்பு ஸ்ரேயாஸ் வேண்டுமென்றே பிசிசிஐ ஓய்வு வழங்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படி ஒரு வீரர் தமக்கு ஓய்வு கிடைக்கவில்லை என்று வெளிப்படையாக கூறும் அளவுக்கு பிசிசிஐயின் செயல் இருந்திருக்கிறது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஸ்ரேயாஸ் சரியாக விளையாடக் கூடாது என்பதற்காக பிசிசிஐ திட்டமிட்டு இதனை செய்கிறதா என்ற குற்றச்சாட்டும் இருந்துள்ளது.

Story first published: Tuesday, June 3, 2025, 15:15 [IST]
Other articles published on Jun 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+