Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறை.. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி.. 10.1 ஓவரில் வென்றது KKR

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன கே கே ஆர் அணியுடன் சி எஸ் கே பலப்பரிட்சை நடத்தியது.

இந்த போட்டியில் தோனி கேப்டனாக திரும்பி இருப்பதால் சிஎஸ்கே அணி வெற்றி பாதைக்கு செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த சூழலில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் கான்வே 11 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

CSK vs KKR

ரச்சின் ரவீந்திரா 9 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் சிஎஸ்கே அணி 16 ரன்களுக்கு எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தடுமாறியது. இந்த நேரத்தில் மூன்றாவது விக்கெட்டுக்கு ராகுல் திருப்பாதி விஜய் சங்கர் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது.

பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் அதிரடியாக ஆட முற்பட்டு 21 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ராகுல் திருப்பாதி 22 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க அஸ்வின் ஒரு ரன்னில் வெளியேறினார்.இதேபோன்று ஜடேஜா, தீபக் ஹூடா ஆகியோர் அடுத்தடுத்து டக்அவுட் ஆக கேப்டன் தோனி ஒரு ரன் மட்டுமே சேர்த்து பெபிலியன் திரும்பினார்.

இதனால் சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி விக்கெட்டுக்கு அன்சூல் கம்போஜ், சிவம் துபே ஆகியோர் நிதானமாக விளையாடி 24 ரன்கள் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதை அடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக விளையாடிய குயிண்டன் டி காக் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். சுனில் நரைன் 5 சிக்சர்கள் இரண்டு பவுண்டரி என 18 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரகானே 20 ரன்கள் எடுக்க, ரிங்கு சிங் 15 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா அணி 10 புள்ளி ஓவர் முடிவில் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் அன்சூல் காம்போஜ், நூர் அஹமத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி 59 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை பெற்றது. சிஎஸ்கே அணி தற்போது தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோற்றது இதுவே முதல் முறையாகும். புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி மைனஸ் 1.55 என்ற ரன் ரேட் உடன் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

Story first published: Friday, April 11, 2025, 22:50 [IST]
Other articles published on Apr 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+