Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 : சதத்தை விட 2 புள்ளிகள் தான் முக்கியம்.. 97 ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர் பேச்சு

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 204 ரன்கள் என்ற இலக்கை தொடங்கியபோது ஜாஸ் பட்லர் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 54 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் குஜராத் அணி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஜாஸ் பட்லர் சதத்தை தவறவிட்டாலும், அணி வெற்றி பெற்றது மிகவும் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார்.

Jos Buttler

இது குறித்து பேசிய அவர், இந்த போட்டியின் மூலம் எங்களுக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்து இருக்கிறது. இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இருந்தது. நான் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று போட்டியை கடைசிவரை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். எந்த பந்தை அடித்து ஆட வேண்டும்.

எந்த பந்தை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்து விளையாடினேன். அதேசமயம் என்னுடைய பேட்டிங் என்பது பல நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. உண்மையிலேயே அகமதாபாத் கடும் வெப்பமாக இருந்தது. நீர்ச்சத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக நான் அதிக அளவு தண்ணீர்களை விளையாடும் போது குடித்தேன். குடிக்கும்போது கூட நீர்ச்சத்து வெயிலின் காரணமாக குறைந்தது.

இதன் மூலம் காலில் சுளுக்கு எல்லாம் ஏற்பட்டது. இது எல்லாம் ஆட்டத்தில் ஒரு பகுதி தான். எனினும் இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் விளையாடுவதற்கு நீங்கள் 100% ஃபிட்டாக இருக்க வேண்டும். நான் முதல் ஆறு போட்டிகளில் மிகவும் மோசமான பீல்டிங்கில் செயல்பட்டேன். இதனால் என்னுடைய பீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான பயிற்சியை செய்தேன்.

இதுபோன்ற கேட்ச்களை பிடிக்க முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ரூத்தர்போர்ட்வுடன் இணைந்து பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அவர் கடினமான சூழ்நிலையில் கூட சிக்ஸர் அடித்து ஆட்டத்தையே தலைகீழ் மாற்றி விடுகிறார். மோகித் சர்மா ஓவரில் அவர் அளித்த சிக்சர் தான் போட்டியையே மாற்றியது என நினைக்கிறேன். சதத்தை மிஸ் செய்தது குறித்து எனக்கு கவலை இல்லை.

ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் அதுதான் முக்கியம். எனக்கு சதம் அடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இரண்டு புள்ளிகள் அதைவிட முக்கியம் என்பதால் ராகுலுடன் என்னுடைய ஸ்கோரை பற்றி நீ கவலைப்படாதே. நாம் வெற்றி பெற வேண்டும் என்று கூறினேன். இதற்காக நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த சில போட்டிகளாக ராகுல் சிறப்பாகவே பேட்டிங் செய்து வருகிறார் என்று ஜாஸ் பட்லர் பாராட்டியுள்ளார்.

Story first published: Saturday, April 19, 2025, 20:46 [IST]
Other articles published on Apr 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+