Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: இப்படி யாரும் அவுட்டாகி பார்த்ததில்லை.. மும்பைக்கு குசேல் மெண்டிஸ் தந்த பரிசு

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணி 229 ரன்கள் என்று இலக்கை துரத்தி விளையாடி வந்தது. குஜராத் அணியின் பலமே அவர்களுடைய பேட்டிங்கில் டாப் 3 வீரர்கள் தான். குஜராத் அணி இந்த சீசனில் அடித்த ரன்களில் 70 சதவீதம் தான்.

சாய் சுதர்சன், சுப்மன் கில் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் அடித்தது தான். இந்த சூழலில் ஜாஸ் பட்லர் இங்கிலாந்துக்கு திரும்பி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்று விட்டார். இதனால் அவருக்கு பதிலாக குஷன் மெண்டிஸ் இன்று களம் இறங்கினார்.

Kusal Mendis Hit wicket

ஏற்கனவே குஜராத் அணியின் கேப்டனாக இருந்த கில் முதல் ஓவரிலே ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.இந்த சூழலில் சாய் சுதர்சனும் குசல் மெண்டிசும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாய் சுதர்சன் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த குஷல் மெண்டிஸ் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் பவுல்ட், பும்ரா ஆகியோரின் பந்துவீச்சை அடித்தார்.

இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பறக்க விட்ட அவர் 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இதனால் ஜாஸ் பட்லருக்கு சரியான ஒரு மாற்று வீரரை தான் குஜராத் அணி தேர்வு செய்து இருக்கிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒரு டிவிஷ்டை குஜராத் ரசிகர்களுக்கு குசல் மெண்டிஸ் தந்தார்.

மிட்செல் ஷார்ட்நர் பந்து வீசும் போது அந்த பந்தை அடிப்பதற்காக காலை நகர்த்தி வைத்த குசல் மெண்டிஸ் நேராக ஸ்டெம்பில் சென்று மோதினார்.இதன் மூலம் அவர் ஹிட் விக்கெட் ஆகி ஆட்டமிழந்தார். இது மும்பை அணிக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.

ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்த நிலையில் குசல் மெண்டிஸ் பட்லருக்கு மாற்றுவீராக நின்று குஜராத் அணியின் வெற்றிக்கு வழிவகுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தன்னாலேயே ஹிட் விக்கெட் ஆகி 20 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் 6.2 வது ஓவரில் குஜராத் அணி 62 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது.

Story first published: Friday, May 30, 2025, 23:08 [IST]
Other articles published on May 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+