கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 39 வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியும் கொல்கத்தா அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் பல பரிட்சை நடத்தியது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணியும் ஏழாவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் மோதியதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த சூழலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த இடத்தில் களமிறங்கிய குஜராத் அணியில் வழக்கம் போல் சாய் சுதர்சன் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். மறுபுறம் சுப்மன் கில், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் குஜராத் அணி வீரர்கள் தடுமாறினர். 12.2 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது. 36 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த சாய் சுதர்ஷன் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார்.
இதனை அடுத்து பட்லர் கில்லுடன் ஜோடி சேர்ந்த அதிரடி காட்டினார்.
பட்லர் எட்டு பவுண்டரிகள் விளாச 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் தன்னுடைய ரன் குவிக்கும் வேகத்தை கில் அதிகப்படுத்தினார். மூன்று சிக்சர் ,10 பவுண்டரி என 55 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ராகுல் தே வாத்தியா டக் அவுட்டாக, தமிழக வீரர் ஷாரூக்கான் ஐந்து பந்துகளில் 11 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. இதேபோன்று சுனில் நரைன், நான்கு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. வைபவ் அரோரா ஒரு விக்கெட்டையும், ஹர்சித் ராணா ஒரு விக்கெட்டையும், ரஸில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.