Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 : GT vs DC டாசின் போது குண்டை தூக்கி போட்ட கில்.. முதலிடம் பிடிக்குமா குஜராத்.. கடும் சவால்

அகமதாபாத் : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத், டெல்லி அணிகள் மோதும் 35 ஆவது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் கில், நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கின்றோம். கடின வெப்பம் இங்கு நிலவுகிறது. எனினும் ஆடுகளம் நன்றாக இருக்கின்றது. ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இல்லை என்றால், இந்த வெப்பத்தில் ஆடுகளத்தில் கிராக் விழும்.

GT vs DC

எங்கள் அணிக்கு எல்லாமே நல்ல விஷயமாக தான் நடந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் கடந்த காலங்கள் குறித்து எதையும் நினைத்துப் பார்க்கவில்லை. அன்றைய நாளில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதில்தான் வெற்றி அமைந்திருக்கிறது. இந்த தொடரில் வீரர்கள் இணைந்து விளையாடுவதற்கு ஒரு இரண்டு வாரமாவது ஆகும்.

எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை. ரபாடா காயம் அடைந்திருக்கிறார். இன்னும் அவர் 10 நாட்களில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என நம்புகிறேன் என்று கில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல், நானும் முதலில் பந்து வீச தான் இருந்தேன். ஆனால் எனக்கு இந்த வெப்பத்தின் காரணமாக ஒரே குழப்பமாக இருந்தது. ஏனென்றால் இந்த வெயிலில் பவுலர்கள் பந்து வீசும் போது நிச்சயம் சோர்வடைந்து விடுவார்கள்.

எனவே அதை பயன்படுத்திக் கொண்டு நாங்கள் அதிக ரன்கள் சேர்க்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் இரண்டாவதாக பந்துவீசி தற்காத்து கொள்ள போகிறோம். இந்த தொடரில் நல்ல தொடக்கத்தை பெற நாங்கள் முயற்சி செய்தோம். நாங்கள் தொடர்ந்து பயிற்சியில் மட்டும் தான் கவனம் செலுத்துகின்றோம்.

திட்டத்தை தீட்டுவதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தான் எங்களுடைய கவனம் இருக்கின்றது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைக்கின்றோம். ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கின்றார்கள். சூழலும் நன்றாக இருக்கின்றது. உங்களுடைய திட்டத்தில் நீங்கள் எப்போதுமே தெளிவாக இருக்க வேண்டும்.
இதனால் ஒவ்வொரு வீரர்களுக்கும் நாங்கள் என்ன பணி என்பதை முன்பே சொல்லிவிட்டோம். சில நேரம் வெற்றி பெறலாம். சில நேரம் தோல்வியை தழுவலாம். எங்கள் அணியில் இன்று ஜாக் விளையாடவில்லை என்று அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 19, 2025, 15:19 [IST]
Other articles published on Apr 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+