Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GT vs MI: ரோகித்தை மறைமுகமாக தாக்கி பேசிய ஹர்திக்.."நான் செய்ததை திருப்பி எனக்கு செய்து விட்டார்கள்"

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. சிஎஸ்கே அணியில் எப்படி பேட்டிங் ஒரு சிக்கலாக இருக்கிறதோ, அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பேட்டிங் பிரச்சினையாக இருக்கிறது.

முதல் போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்டியா இந்த ஆட்டத்தில் கேப்டனாக திரும்பிய நிலையில் மும்பை வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குஜராத் அணி மும்பைக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா சொன்ன கருத்துக்களை தற்போது பார்க்கலாம்.

Hardik

நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை பட்டியலிடுவது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் நாங்கள் பல தவறுகளை செய்தோம். நாங்கள் ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை. பில்டிங்கில் நாங்கள் சொதப்பியதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜராத் அணியை அடிக்க விட்டு இருக்கிறோம்.

குஜராத் தொடக்க வீரர்கள் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். அவர்கள் எந்த ஒரு ரிஸ்க்கான ஷார்ட்டுகளையும் ஆடி ரன்கள் சேர்க்கவில்லை. குஜராத் அணி தங்களுக்கு தேவையான இலக்கை நிர்ணயித்து எங்களை கடும் நெருக்கடியில் ஆழ்த்தி இருக்கிறார்கள். தற்போது ஐபிஎல் தொடர் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கின்றது.

ஆனால் அதே சமயம் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் ரன்களை குவிக்க வேண்டும். அவர்கள் விரைவில் அதை செய்வார்கள் என நான் நம்புகிறேன். நான் அதிக அளவு பந்து வீசினேன். அப்போது பந்து ஆடுகளத்தில் நின்று வருகிறது என்பதை குஜராத் வீரர்கள் கவனத்து இருப்பார்கள். அந்த வகை பந்துகளை அடிப்பது மிகவும் கடினம்.

ஏனென்றால் ஆடுகளத்தில் நிலையான பவுன்ஸ் இல்லை. இதன் காரணமாக பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது. நான் அவர்களுக்கு செய்ததை எனக்கு அவர்கள் மீண்டும் செய்து விட்டார்கள் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ரோகித் சர்மா சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததை மறைமுகமாக தாக்கி பேசும் வகையில் ஹர்திக் பாண்டியாவின் கருத்து அமைந்திருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு உள்ளனர்.

Story first published: Saturday, March 29, 2025, 23:59 [IST]
Other articles published on Mar 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+