Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GT vs PBKS: பிசிசிஐயின் புதிய விதியால் தான் வென்றோம்.. பவுலிங்கில் கைக்கொடுத்தது..ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக முதல்முறையாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் 42 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் ஸ்ரேயாஸ் அணிக்காக தன்னுடைய சதத்தை தியாகம் செய்தார். இந்த நிலையில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ், "முதல் போட்டியிலே ஆட்டம் இழக்காமல் 97 ரன்கள் குவித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது."

Shreyas Iyer

" இது கேக்கில் இருக்கும் செர்ரி போல் இந்த இன்னிங்ஸ் அமைந்துள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இதைவிட சிறந்த உணர்வு வேறு எதுவும் இல்லை. ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் ரன்கள் சேர்க்க வேண்டும். அதற்கு தகுந்தார் போல் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ரபாடாவுக்கு எதிராக முதல் பந்தில் நான் அடித்த பவுண்டரி என்னுடைய நம்பிக்கையை அதிகரித்தது."

"இதுதான் எனக்கு நல்ல உத்வேகத்தை கொடுத்தது. மேலும் ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. இதனை பயன்படுத்திக் கொண்டு நான் ரன்கள் சேர்த்தேன். ஆடுகளத்துக்கு தகுந்த மாதிரி என்னுடைய பேட்டிங்கை மாற்றிக் கொண்டேன். கடைசி கட்டத்தில் ஷசாங் 16 பந்துகளில் 44 ரன்கள் அடித்தது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது."

"பனிப்பொழிவு இருக்கும் நிலையில் நிச்சயம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும் என நினைத்தோம். ஆனால் ஷசாங் அபாரமாக பந்து வீசி எங்களை வெற்றி பெற வைத்திருக்கிறார் .அவருடைய குணம் மற்றும் உத்வேகம் அபாரமாக இருக்கிறது. போட்டியை அவர் அணுகும் முறை சிறப்பானதாக உள்ளது. மேலும் ஆர்ஸ்தீப் சிங் இந்த போட்டியில் ஒரு முக்கிய பங்காற்று இருக்கிறார்."

"பந்து கடைசி நேரத்தில் ரிவர்ஸ் ஆவதாக ஆர்ஸ்தீப் சிங் என்னிடம் கூறினார். பிசிசிஐ பந்தின் ஒரு பகுதியை பளபளலவென வைத்துக் கொள்ள எச்சிலை தடவ அனுமதி அளித்தது உதவிகரமாக இருக்கிறது என நினைக்கின்றேன். இந்த தொடருக்கு முன்பாகவே அனைவரும் நல்ல மன உத்வேகத்துடன் இருந்தோம். அனைவரும் வெற்றிக்காக பங்காற்றுவது மகிழ்ச்சியை தருகிறது" என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 26, 2025, 0:31 [IST]
Other articles published on Mar 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+