Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PBKS vs GT: 2 சூப்பர் ஸ்டார் கேப்டன்களும் மோதல்.. இம்பேக்ட் விதியில் கில் வைக்கப்போகும் டிவிஸ்ட்

குஜராத் : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது. நடப்பு சீசனில் எட்டு அணிகளும் தங்களுடைய முதல் போட்டிகளில் விளையாடிய நிலையில் தற்போது தான் இந்த இரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்குகிறது.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் கில், நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய விரும்புகிறோம்.

PBKS vs GT

இது கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம். இங்கு பனிப்பொழிவும் கொஞ்சம் இருக்கிறது. அதையும் மனதில் வைத்து தான் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது நிச்சயம் பனிப்பொழிவு தாக்கத்தை ஏற்படுத்தும். மிகப்பெரிய இலக்கு கூட இங்கு வெற்றிகரமாக ஷேஸ் செய்ய முடியும்.

இந்த தொடருக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி வருகின்றோம். எங்கள் அணியில் உள்ள அனைத்து துறைகளையும் சரியாக வீரர்களை பொறுத்திருக்கின்றோம். எங்களுடைய பௌலிங் படையும் அபாரமாக இருக்கிறது. உலகில் மிகப்பெரிய மைதானத்தில் விளையாடுவது என் அதிர்ஷ்டமாக கருதுகின்றேன்.

எங்கள் அணியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழற் பங்குவீச்சாளர்கள் உள்ளனர் என்று கில் கூறியுள்ளார். குஜராத் அணியில் நடு வரிசையில் போதிய பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் நியூசிலாந்து வீரர் கிளான்ஸ் பிலிப்ஸ் இம்பேக்ட் வீரியராக பயன்படுத்த கில் முடிவு எடுத்துள்ளார்.

இதனால் கில் பிளேயிங் லெவனில் வெறும் மூன்று வெளிநாட்டு வீரர்களை தான் தேர்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நாங்களும் முதலில் பந்து வீச தான் முடிவெடுத்தோம். ஏனென்றால் நான் ஒரு ஸ்கோரை வெற்றிகரமாக சேஸ் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும். இதுவும் ஒரு சவால் தான்.

எங்கள் அணியில் பல அபாரமான வீரர்கள் இருக்கிறார்கள். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். ஒரு அணிக்கு ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். எங்கள் அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரே இடத்திற்கு பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இதனால் யாரை தேர்வு செய்வது என்பதை தலைவலியாக இருக்கிறது என்று ஸ்ரேயாஸ் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 25, 2025, 19:29 [IST]
Other articles published on Mar 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+