Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- இது தான் டா உண்மையான ஆர்சிபி.. துவம்சம் செய்த குஜராத் தமிழர்கள்.. பட்லர் மாஸ் சம்பவம்

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி தங்களுடைய முதல் தோல்வியை தழுவி இருக்கிறது. சொந்த மண்ணில் தங்களுடைய முதல் போட்டியில் ஆர்சிபி அணி இன்று விளையாடியது. விளையாடிய 2 போட்டிகளுமே வெற்றி பெற்று அந்த அணி முதலிடத்தில் இருந்த நிலையில் ஆர்சிபி அணி இம்முறை பெரிய அளவு சாதிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஆர்சிபி தங்களுடைய உண்மையான பார்மை இன்று தங்களது ரசிகர்கள் முன் வெளி காட்டியது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 14 ரன்களிலும், விராட் கோலி 7 ரன்களிலும், டேவுதட் படிக்கல் நான்கு ரன்களிலும், கேப்டன் ரஜத் பட்டிதார் 12 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

RCB vs GT

இதனால் ஆர் சி பி அணி 42 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. லிவிங்ஸ்டோன் அரை சதம் அடித்து அணியை சரி விலிருந்து மீட்டார். ஜித்தேஷ் சர்மா 33 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆர் சி பி அணி 14 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் டிம் டேவிட் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் என கௌரவமான இலக்கை எட்டியது.

முன்னாள் ஆர்சிபி வீரர் சிராஜ் இன்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தம்மை அணியிலிருந்து நீக்கியதற்கு ஆர் சி பி அணிக்கு பதிலடி கொடுத்தார். இதனை அடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 36 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பில் சால்ட் 14 ரண்களில் வெளியேற, இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

6 சிக்சர்கள், ஐந்து பவுண்டரி என ஜாஸ் பட்லர் ஆர்சிபியின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தார். இதன் மூலம் 39 பந்துகளில் ஜாஸ் பட்லர் 73 ரன்கள் எடுத்தார். இதே போன்று ரூத்தர் போர்டு 18 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதனால் குஜராத் அணி 17.5 ஓவர்கள் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.இதன் மூலம் நடப்பு சீசனில் ஆர்சிபி அணி முதல் தோல்வியை தழுவி இருக்கிறது. சொந்த மண்ணில் ஆர்சிபி அணி தோற்று இருப்பதை மற்ற ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Wednesday, April 2, 2025, 23:42 [IST]
Other articles published on Apr 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+