Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - குஜராத் அணி தான் முக்கியம்.. கேப்டன் சுப்மன் கில் செய்த தியாகம்

அகமதாபாத் : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்வது என்பதை அறிவிக்க இருக்கிறது. தீபாவளி அன்று மாலை 5 மணி வரை பிசிசிஐ கெடு விதித்துள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் இருக்கும் ஸ்டார் வீரர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கான், தமக்கு இந்த சம்பளம் போதவில்லை என்றும் இதனால் ஏலத்தில் பங்கேற்க போவதாகவும் கூறி இருந்தார். பொதுவாக இந்திய அணியின் ஸ்டார் வீரர்களையும் கேப்டன் பதவியில் இருப்பவர்களையும் தான் அதிக சம்பளம் கொடுத்து ஒவ்வொரு அணியும் முதல் வீரராக தக்க வைத்துக் கொள்ளும்.

ipl 2025 gujarat titans shubman gill rashid khan csk

அப்படி இருக்க விராட் கோலிக்கு அடுத்த தலைமுறை ஸ்டார் வீரராக இருக்கும் சுப்மன் கில்லை 18 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைக்க குஜராத் அணி நினைத்தது. ஆனால் ரஷித் கான் அணியில் மிக சீனியர் வீரராக இருப்பதால், அவரும் தமக்கு அதிக சம்பளம் வேண்டும் என கேட்டு போர்க்கொடி தூக்கினார். நிலைமையை புரிந்து கொண்ட கில், தமக்கு சம்பளத்தை விட அணி தான் முக்கியம் எனக் கூறி ரஷீத் கான் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக குஜராத் அணி ரசித் கானை முதல் வீரராக 18 அல்லது 20 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறது. இதனால் கில் இரண்டாவது வீரராக 14 அல்லது 16 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட இருக்கிறார். இதேபோன்று குஜராத் அணியின் டேவிட் மில்லர், சாய் சுதர்சன், சாய் கிஷோர் போன்ற வீரர்களையும் தக்க வைக்க முடிவெடுத்து இருக்கிறது.

தோனியை போல் மோகித் சர்மாவும் இந்திய அணிக்காக விளையாடி பல ஆண்டுகள் ஆவதால் அவரை நான்கு கோடி ரூபாய்க்கு uncapped வீரராக குஜராத் அணி தக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் குஜராத் அணியின் அடித்தளம் உடைய வாய்ப்பு இல்லை. ஒரு முடிவால் குஜராத் அணி காப்பாற்றப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, October 30, 2024, 18:23 [IST]
Other articles published on Oct 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+