Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: என்ன கொடுமை சார்? CSK கண்டு பிடித்த சாய் சுதர்சன், இன்று குஜராத் அணிக்காக ரன் குவிப்பு

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் எதிர்கால வீரர்களை கண்டெடுப்பதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கால வீரர்களை தயார் செய்வதற்காக ஜூனியர் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணியை உருவாக்கி தமிழ்நாட்டு கிரிக்கெட்டில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்தது.

Sai sudharsan

அப்படி ஜூனியர் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வீரர் தான் சாய் சுதர்சன், ஷாருக்கான் எல்லாம். இதில் சாய் சுதர்சன் ஜூனியர் சிஎஸ்கே அணிக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் எல்லாம் விளையாடி இருக்கிறார். ஆனால் சாய் சுதர்சனை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கவே இல்லை என்பது தான் சோகமான விஷயம்.

ஏனென்றால் சிஎஸ்கே தான் சென்னை வீரர்களையே எடுக்க மாட்டார்களே. ஆனால் சாய் சுதர்சன் தற்போது அபாரமாக விளையாடி வருகிறார். ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்களும், ஐபிஎல் 2023 சீசனில் குஜராத் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 362 ரன்களும், ஐபிஎல் 2022 சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடி 145 ரன்களும் சாய் சுதர்சன் அடித்து இருந்தார்.

தற்போது 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி சாய் சுதர்சன் 328 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த ஆறு இன்னிங்ஸில் சாய் சுதர்சன் 4 அரை சதம் அடித்தது மட்டுமல்லாமல் தற்போது ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றி இருக்கிறார். இப்படி பேட்டிங்கில் அதிரடி காட்டும் சாய் சுதர்சன், சிஎஸ்கே அணி தான் கண்டுபிடித்தது.

ஆனால் சிஎஸ்கே அணி வழக்கம்போல் அவர்களை ஏலத்தில் எடுக்காமல் விட்டது, தற்போது மிகப்பெரிய பின்னடைவை சிஎஸ்கேவுக்கு ஏற்படுத்திவிட்டது. சாய் சுதர்சன் ஷாருக்கான் போன்ற வீரர்களை எல்லாம் சிஎஸ்கே பயன்படுத்தியிருந்தால் தற்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, April 12, 2025, 17:07 [IST]
Other articles published on Apr 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+