மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்வது, எத்தனை ஆர்
டி.எம் மேட்ச் கார்டை வழங்குவது என்பது குறித்து அண்மையில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிசிசிஐ யின் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு வீரர்களை ரைட் டூ மேட்ச் கார்டு என்ற முறையில் மீண்டும் அணியில் தேர்வு செய்யவும் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

ஹர்திக் பாண்டியா பேட்ஸ்மேன் ஆகவும், பவுலர் ஆகவும் தன்னுடைய திறமையை டி20 உலக கோப்பையில் நிரூபித்திருக்கிறார். எனினும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவதை அந்த அணியில் இருக்கும் பல்வேறு வீரர்களும் விரும்பவில்லை. தற்போது டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சூரிய குமாரை கேப்டனாக தங்களது அணிக்கும் நியமிக்க முடிவு எடுத்துள்ளது.
இதே போன்று பும்ராவும் கேப்டன் அல்லது துணை கேப்டன் பதவிக்கு ஆசைப்படுகிறார். ரோகித் சர்மா தற்போது ஹர்திக் பாண்டியா மீது எந்த ஒரு வருத்தத்திலும் இல்லாமல் இருக்கிறார். இதனால் ஹர்திக் தொடர்வதை ரோகித் சர்மா எதிர்க்கவில்லை. இந்த சூழலில் மும்பை அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஹர்திக் பாண்டியா நினைக்கிறார்.
இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா ஆர்சிபி அணிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன. டுப்ளிசிஸ்க்கு தற்போது 40 வயது ஆகிவிட்டதால், அவர் வரும் ஐபிஎல் சீசனில் கேப்டனாக இருப்பது கடினமாக இருக்கும். இதனால் ஹர்திக் பாண்டியாவை ஏலத்துக்கு முன்பே ட்ரான்ஸ்பர் செய்ய ஆர்சிபி அணி முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஆர் சி பி அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா திகழ வாய்ப்பு உள்ளது.