Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK- தோனி ஐபிஎல் தொடரில் அடித்த அரை சதம் எத்தனை? தோனியின் நாட் அவுட் எண்ணிக்கை எத்தனை?

சென்னை: ஐபிஎல் தொடரில் 2008 முதல் தொடர்ந்து விளையாடி வரும் வீரராக இருக்கிறார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீண்ட காலம் விளையாடிய அவர் 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஐபிஎல் தொடரின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக ஆடி வரும் தோனி இதுவரை எத்தனை அரை சதம் அடித்திருக்கிறார்? எத்தனை போட்டிகளில் நாட் அவுட் ஆக இருந்துள்ளார்? என்பது பற்றி பார்க்கலாம்.

ipl 2025 chennai super kings dhoni

தோனி ஐபிஎல் தொடரில் 24 அரை சதங்களை அடித்து இருக்கிறார். அவரது அதிவேக அரை சதம் என்பது 20 பந்துகளில் அடிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 20 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்ததே, அவரது அதிவேக அரை சதமாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தது அதற்கு அடுத்த அதிரடி அரை சதமாக உள்ளது.

இதுவரை நடந்துள்ள 17 ஐபிஎல் தொடர்களில் நான்கு சீசன்களில் மட்டுமே தோனி அரை சதம் அடிக்காமல் இருந்திருக்கிறார். 2020, 2021, 2023 மற்றும் 2024 ஆகிய நான்கு ஆண்டுகளில் மட்டுமே அவர் அரை சதம் அடிக்காமல் இருந்து இருக்கிறார். 2019க்கு பின் தோனிக்கு முழங்காலில் பிரச்சனை ஏற்பட்டது. அதனால், அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி இருக்கிறார்.

அதனால் ஏழாம் வரிசை அல்லது எட்டாம் வரிசையில் தான் இறங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 முதல் அவரது ஸ்ட்ரைக் ரேட் சரிவை சந்தித்தது. ஆனால், 2023 இல் 104 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 182 ஆக இருந்தது. 2024 இல் 166 ரன்கள் மட்டுமே எடுத்த போதும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 220.5 ஆக இருந்தது.

2024 ஐபிஎல் தொடரில் தோனி வைத்து இருந்த 220.5 என்பது தான் அவரது ஐபிஎல் வாழ்விலேயே ஒரு சீசனின் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரை சதம் அடிக்காவிட்டாலும் முன்பை விட அதிரடியாக ஆடத் துவங்கி இருக்கிறார்.

தோனி இதுவரை 264 ஐபிஎல் போட்டிகளில் 5243 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 84 ஆகும். அவரது பேட்டிங் சராசரி 39.13 ஆகும். அவர் 95 போட்டிகளில் நாட் அவுட் ஆக இருந்துள்ளார் என்பது பிரமிக்க வைக்கும் சாதனையாக உள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டும் தோனி 252 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். 152 கேட்ச்-களையும், 42 ஸ்டம்பிங்-குகளையும் செய்து இருக்கிறார் தோனி.

Story first published: Saturday, January 11, 2025, 14:46 [IST]
Other articles published on Jan 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+