Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: இனி ஐபிஎல் போட்டிகளை பார்க்க எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? ஜியோஸ்டார் பிளான் என்ன?

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமும் சமீபத்தில் ஒன்றிணைந்தன. ஜியோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான வியாகாம்18 மற்றும் ஹாட்ஸ்டாரின் தாய் நிறுவனமான ஸ்டார் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரே நிறுவனமாக மாறி உள்ளன.

இதை அடுத்து ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார் இணைந்து தற்போது ஜியோ ஸ்டார் என்ற புதிய மொபைல் ஸ்ட்ரீமிங் தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு வரை ஜியோ சினிமா ஐபிஎல் தொடரை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து வந்தது. அதனை பல கோடி இந்தியர்கள் நேரலையில் பார்த்து வந்தனர்.

IPL 2025 Jiostar Cricket 2025

ஆனால் இனி ஜியோ ஸ்டார் தளத்தில் தான் போட்டிகளை பார்க்க முடியும். அதுவும் குறைந்தபட்சம் மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் 149 ரூபாய் செலுத்த வேண்டும். இது மூன்று மாதத்திற்கான கட்டணம் ஆகும். ஒரு மாதத்திற்கு 50 ரூபாய் என்ற அளவில் மூன்று மாதத்திற்கு சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அடிப்படை திட்டத்தில் ஓராண்டு சந்தாவும் செலுத்தலாம். இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 499 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் ஒரே ஒரு மொபைல் போனில் மட்டும் ஐபிஎல் உட்பட ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டாரில் இருக்கும் அனைத்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிசையும் பார்த்துக் கொள்ளலாம். இந்த அடிப்படை திட்டத்தில் 720 பிக்சல் தரத்தில் ஒளிபரப்பப்படும்.

இதைத் தவிர்த்து மேலும் இரண்டு திட்டங்கள் உள்ளன. ஒன்று ஓராண்டுக்கு 899 ரூபாய் செலுத்த வேண்டும். அதில் மொபைல், டிவி அல்லது லேப்டாப் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு இடங்களில் ஜியோ ஸ்டாரை பயன்படுத்தி ஒளிபரப்புகளை பார்த்துக் கொள்ளலாம். இதில் 1080 பிக்ஸல் தரத்தில் வீடியோ ஒளிபரப்பு செய்யப்படும். கிரிக்கெட், திரைப்படம் உட்பட எந்த ஒரு வீடியோவுக்கு இடையிலும் விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படலாம். விளம்பரமில்லாத சேவைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

மற்றொரு திட்டத்தில் ஓராண்டுக்கு 1499 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் திரைப்படம், வெப் சீரிசுக்கு இடையே எந்த விளம்பரமும் இடம் பெறாது. ஆனால் கிரிக்கெட் போட்டிகளின் இடையே விளம்பரம் ஒளிபரப்பப்படும். இதில் டிவி, லேப்டாப், மொபைல் உள்ளிட்ட ஏதேனும் நான்கு இடங்களில் ஜியோ ஸ்டார் பயன்படுத்திக் கொள்ளலாம். 4K தரத்தில் வீடியோ ஒளிபரப்பப்படும்.

Story first published: Friday, February 14, 2025, 21:05 [IST]
Other articles published on Feb 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+