14 வயதில் பெரிய சிக்சர் அடிப்பது எப்படி? வைபவ் பேட்டிங்கில் மறைந்திருக்கும் ரகசியம்.. இதை கவனிங்க
ஜெய்ப்பூர்: ஐபிஎல் வரலாற்றில் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தியதை தான் தற்போது ஒட்டுமொத்த தேசமே, இல்லை ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே பேசி வருகிறது. ஆனால், இந்த 14 வயது சிறுவனால் எப்படி பெரிய அளவு சிக்சர் அடிக்க முடிகிறது. இதற்கான பவர் அவருக்கு எப்படி கிடைக்கிறது. அவருடைய பேட்டிங்கில் மறைந்திருக்கு ரகசியம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
அதற்கு முன்பு, சிறுவன் எப்படி சிக்சர் அடிக்கிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதற்கு கவாஸ்கர் சொல்லும் இந்த வார்த்தையை கேட்டால், உங்களுக்கு அதற்கான ரகசியம் தெரிந்துவிடும். சிக்சர் அடிக்க இயற்கையான வலு தேவை என்றால், மல்யுத்த வீரர்கள் மட்டும் தான் சிக்சர் அடிக்க முடியும், ஆனால் டைமிங் தான் அதை தீர்மானிக்கிறது என்பார்.

வைபவ் விசயத்தில் அவர் வெறும் 3 steps தான் பின்பற்றுகிறார். அதில் ஒன்று பயமின்றி விளையாடுவது, பந்தை பார்த்து அடிப்பது, Bat swing மூலம் ஷாட் அடிப்பது ஆகியவை தான் அவருடைய பவருக்கு காரணம். பந்து ஸ்விங் ஆவது குறித்து பார்த்து இருப்போம். அது என்ன
பேட் ஸ்விங்? பந்தை அடிக்க, பவர் தேவை. அந்த பவர் எப்படி உருவாகிறது. சிலருக்கு இயற்கையாகவே வலு இருக்கும். பின் கையை வைத்து, பவரை உருவாக்கி தோனி போல் சிக்சர் அடிப்பார்கள்..
ஆனால், பெரிய ஹிட்டர்களுக்கு பேட் ஸ்விங் மூலம் தான் பவர் கிடைக்கும். பந்தை பார்த்து, கணித்து, அதற்கு முன்பே பேட்டை ஓங்கி, சரியான டைமிங்கில் பந்தை அடித்து, அத்துடன் நிறுத்தாமல் பேட்டை சுற்றுவது.. இப்படி செய்வதன் மூலம் பவர் கிடைக்கும், ஆனால் பந்தும், பேட்டும் சந்திக்கும் டைமிங் மிகவும் முக்கியம்.. அது மிஸ் ஆனால் கண்டிப்பாக கேட்ச் தான்..
பேட்டை ஓங்கி அடிப்பதன் மூலம் , பவரை உருவாக்க முடியும். இதனை தான் வைபவ் சிக்சராக மாற்றுகிறார். மேலும், கிரிக்கெட்டின் அடிப்படை யுக்தியான பந்தை பார்த்து வைபவ் அடிக்கிறார். இதன் மூலம் யார் பந்து வீசினாலும் பிரச்சினை இல்லை, பந்தை பார்த்தால் நான் அடிப்பேன் என்று அணுகுவது தான் வைபவ்க்கு வெற்றியை தருகிறது.. பந்தும், பேட்டை சுற்றும் டைமிங்கும் மிஸ் ஆனால், புவனேஸ்வர் குமார் கடந்த போட்டியில் செய்தது போல் தான் அவுட் ஆவார்.
இப்படிப்பட்ட பேட் ஸ்விங் யுவராஜ் இடம் இருக்கிறது. இந்த ரகசியத்தை வைபவ், சிறு வயதிலேயே கற்றுவிட்டார். இதனால், அடுத்த சில ஆண்டுகளில் எல்லாம் வைபவ் கோடிக்கணக்கில் ஊதியம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியிலும் இந்த ஆண்டே வைபவ்க்கு வாய்ப்பு கிடைத்துவிடும். இந்த நிலையில், பிரித்வி ஷா போல் ஆகிவிடாமல், தொடர்ந்து வைபவ் கிரிக்கெட் மீது நாட்டம் இருந்து தொடர்ந்து உழைத்தால், நிச்சயம் நமக்கு நல்ல பொழுதுப் போக்கை கொடுக்கும் வீரர் கிடைத்துவிடுவார். தற்போது அவருக்கு 14 வயது தான் ஆகிறது. இதனால். 2050-ல் நாம் ஐபிஎல் பார்த்தோம் என்றால், இவர் அப்போதும் விளையாடினால் என்றால், அப்போது வைபவ்க்கு 39 வயது தான் ஆகியிருக்கும்..


Click it and Unblock the Notifications