Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தேர்வான 574 வீரர்கள்.. எத்தனை மணிக்கு தொடக்கம்? பிசிசிஐ வெளியிட்ட முழு விவரம்

மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சீனியர் வீரராக ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜூனியர் வீரராக 13 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி தேர்வாகியுள்ளனர்.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கவுள்ளது. இதற்காக 10 அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் ஏலத்தில் பங்கேற்க தேர்வாகியுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க மொத்தமாக 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

ipl 2025 auction

மொத்தமாக 1,165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்திருந்தனர். அதில் இருந்து மெகா ஏலத்தில் பங்கேற்க 574 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மொத்தமாக 366 இந்திய வீரர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அன்கேப்ட் வீரர்களில் 318 இந்திய வீரர்களும், 12 வெளிநாட்டு வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.

அதேபோல் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ள 81 வீரர்களுக்கு அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மெகா ஏலம் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தவுள்ள தொகுப்பாளராக மீண்டும் மல்லிகா சாகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கும் சீனியர் வீரர் என்ற பெருமையை 42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார். அதேபோல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் சிறிய வீரராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கனவே இந்திய யு19 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, ரஞ்சி டிராபி தொடரிலும் விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் செட்டில் வரவுள்ள வீரர்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது.

அதில், ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர், ககிசோ ரபாடா, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் 2வது செட்டில் சாஹல், லிவிங்ஸ்டன், மில்லர், கேஎல் ராகுல், ஷமி, சிராஜ் ஆகியோரும், 3வது செட்டில் ப்ரூக், கான்வே, ஜேக் ஃபிரேசர், மார்க்ரம், படிக்கல், த்ரிப்பாட்டி, வார்னர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 4வது செட்டில் அஸ்வின், வெங்கடேஷ் ஐயர், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஹர்சல் படேல், ரச்சின் ரவீந்திரா, ஸ்டாய்னிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

5வது செட்டில் விக்கெட் கீப்பர்களான பேர்ஸ்டோவ், டி காக், குர்பாஸ், இஷான் கிஷன், சால்ட் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நடராஜன், போல்ட், ஹேசல்வுட், பிரசித் கிருஷ்ணா, நார்கியே, கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் 6வது செட்டிலும், இடம்பெற்றுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா அணியின் கேமரூன் க்ரீன் மெகா ஏலத்தில் பதிவு செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சரின் பெயர் ஏலப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 15, 2024, 20:52 [IST]
Other articles published on Nov 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+