Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.30 லட்சம் டூ ரூ.3 கோடி.. இளம் வீரர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்கலாம்.. ஐபிஎல் அணிகள் கொடுத்த ஐடியா!

மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிகள், ஆர்டிஎம், இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இதுவரை நடந்த ஆலோசனை கூட்டத்தில் கேகேஆர் அணி தரப்பில் ஒரு வீரரை மட்டும் ரீடெய்ன் செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, 8 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்கலாம். இதன் மூலமாக இந்திய வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்று, அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியத்தை பெற முடியும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டது. அதேபோல் மும்பை அணி தரப்பில் 5 அல்லது 6 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்க கோரியது.

ipl 2025 csk ms dhoni

இதனிடையே பஞ்சாப், டெல்லி, லக்னோ போன்ற அணிகள் 3 வீரர்களை கடந்து ரீடெய்ன் செய்யும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று கூறி வருகின்றனர். அதேபோல் சிறிய அணிகளாக கருதப்படும் டெல்லி, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட அணிகள் இளம் வீரர்களை பாதுகாக்கவும், அவர்கள் நன்றாக செயல்பட்டால் ஊதியத்தை அதிகரிக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஏனென்றால் இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும். இதனால் அந்த வீரர் மீண்டும் ஏலத்திற்கு செல்ல விரும்புவார். மும்பை போன்ற அணிகள் அவரை அணுகும் போது, சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

இதனால் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டால், அவரின் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க அனுமதிக்க பல்வேறு அணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். உதாரணமாக ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர், அந்த சீசனில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கலாம் என்று அனுமதி கோரப்பட்டுள்ளது.

அதேபோல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளின் பர்ஸ் வேல்யூவையும் ரூ.130 கோடி முதல் ரூ.140 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பர்ஸ் தொகையாக ரூ.100 கோடி வரை அனுமதிக்கப்பட்டது. சுமார் ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிகரித்தால், வீரர்களின் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 25, 2024, 13:01 [IST]
Other articles published on Jul 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+