For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தயாராகவில்லை.. சுரேஷ் ரெய்னா சொன்ன கருத்து சரியா? என்ன நடந்தது?

மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் வருவதையொட்டி, சிஎஸ்கே அணிக்கு சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால், ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டால், தோனி அடுத்த சீசன் விளையாட ரெடி என்று கூறியுள்ளார். இதனால் தோனியை ரீடெய்ன் செய்ய சிஎஸ்கே அணி சில விதிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதனிடையே தோனியின் நெருங்கிய நண்பரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான சின்ன தல சுரேஷ் ரெய்னா, தோனி இன்னும் ஒரு சீசன் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கான காரணம் குறித்து பேசுகையில், தோனி இன்னொரு சீசன் விளையாட வேண்டும் என்று கூறியதற்கான காரணம் அவரின் பேட்டிங் கடந்த சீசனில் அற்புதமாக இருந்தது தான்.

ipl 2025 csk ruturaj gaikwad

அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்புக்கு வந்துள்ள ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இன்னும் ஒரு ஓராண்டு தேவையாக உள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்த போது, ஏராளமான விஷயங்கள் சொல்லப்பட்டன. அவரது கேப்டன்சி குறித்த விமர்சனங்களும் வந்தன என்று கூறியுள்ளார்.

இதன் மூலமாக சுரேஷ் ரெய்னா, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார். தோனியுடன் விளையாடும் போது ருதுராஜ் கெய்க்வாடால் இன்னும் வேகமாக கேப்டன்சியில் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்று சுரேஷ் ரெய்னாவின் பேச்சுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் தோனியை பொறுத்தவரை அவர் யாருக்கும் கற்றுக் கொடுக்க மாட்டார். சில விஷயங்களை மட்டுமே சொல்லுவார். அதன்பின் அந்த சில விஷயங்களை வைத்து கொண்டு அந்த வீரராக முன்னேறி வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார். கடந்த சீசனிலேயே ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டிகளின் போது மட்டுமே தோனியிடம் பேசினார்.

இரண்டாம் கட்ட போட்டிகளின் போது தோனி பக்கமே ருதுராஜ் கெய்க்வாட் செல்லவில்லை. ஃபீல்டிங் மாற்றங்களை மட்டுமே ஒரு கீப்பராக சொல்லிக் கொடுத்தார். அதேபோல் ஐபிஎல் தொடருக்கு பின் ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா பிரீமியர் லீக், துலீப் டிராபி உள்ளிட்ட தொடர்களில் கேப்டனாக செயல்பட உள்ளார். சீனியர் வீரர்களை கையாள துலீப் டிராபியில் கற்றுக் கொள்வார் என்று பார்க்கப்படுகிறது.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கியமான ஆயுதமான ஸ்பின்னர்களை ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பயன்படுத்தவில்லை. அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதே பலரின் விமர்சனமாக இருந்தது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் ஸ்பின்னர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் இறங்கி வந்து அடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பதால், அவர்களை பயன்படுத்துவதில் சில தயக்கம் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

அதனை காலப்போக்கில் ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் கற்றுக் கொள்வார். அதேபோல் கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் அதிகளவிலான டாஸை இழந்ததும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி கொண்டே வந்தனர். இதனால் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ தயார் செய்ய தோனி இன்னொரு சீசனில் விளையாட தேவையில்லை என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Story first published: Friday, August 30, 2024, 15:14 [IST]
Other articles published on Aug 30, 2024
English summary
IPL 2025: Is it right, Ruturaj Gaikwad Needs to be groomed by MS Dhoni for one more year for the CSK Captaincy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+