For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷான் கிஷனை தூக்கி எறிந்த MI, பிசிசிஐ.. அடைக்கலம் தந்த சன்ரைசர்ஸ்.. இனி சாதித்தால்தான் வாய்ப்பு

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால நட்சத்திர வீரர் என்ற பெயரைப் பெற்றவர் இஷான் கிஷன். ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், தற்போது இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஒதுக்கப்பட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடைக்கலம் பெற்று இருக்கிறார். அவர் இந்திய அணியில் இடம் பெற ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.

இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7 ஆண்டுகள் விளையாடி இருந்தார். அங்கு சிறப்பாக ஆடியதால் இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றார். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருப்பதாக அனைவரும் நம்பினர்.

IPL 2025 Ishan Kishan s Comeback Will Sunrisers Hyderabad Revive His Career

ஆனால், இந்திய அணியுடன் சுமார் இரண்டு ஆண்டுகள் பயணம் செய்த இஷான் கிஷன், பிளேயிங் லெவனில் தொடர்ந்து சரியான வாய்ப்புகள் இல்லாததால் மனம் துவண்டு போனார். அங்கிருந்து பிரச்சினைகளும் ஆரம்பித்தன. அவரை இந்திய அணி நிர்வாகம் ஒதுக்கி வைத்தது. பின்னர் இஷான் கிஷன் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட மறுத்தார்.

அத்துடன் அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் அவரைத் தூக்கி எறிந்தது. 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக இஷான் தக்கவைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, அவரை ஏலத்தில் வாங்கவும் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

இதிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை விலக்கி வைக்க முடிவு செய்துவிட்டதை நாம் புரிந்து கொள்ளலாம். அடுத்து, இந்திய அணியில் அவர் என்ன செய்தாலும் வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சாஹலுக்கு என்ன நடந்ததோ, அதேதான் இஷான் கிஷனுக்கும் நடந்து வருகிறது.

ஆனால், இந்த நிலையை மாற்றுவதற்கு இஷான் கிஷனுக்கு தற்போது ஒரு வாய்ப்பு உள்ளது. அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 2025 ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டு இருக்கிறார். அந்த அணி அதிரடி பேட்டிங் வியூகத்திற்குப் பெயர் பெற்றது. மேலும் அணியில் இருக்கும் வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் ஆகியோரும் அதிரடி பேட்ஸ்மேன்களாகவே உள்ளனர்.

இஷான் கிஷனும் பொதுவாகவே அதிரடியாக ஆடும் குணம் உடையவர். எனவே, அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிரடி ஆட்டங்களை ஆடி அதிக ரன்கள் குவித்தால், நிச்சயமாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பை மறுக்க முடியாது. இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தற்போது பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பீர், பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் ஆடும் திறனுடைய வீரர்களையே அதிகம் விரும்புகிறார். இஷான் கிஷன் இதற்கு முன்பே பேட்டிங் வரிசையில் பல்வேறு இடங்களில் விளையாடி இருக்கிறார். தற்போது இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவருக்கு சிறந்த மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் இந்திய டி20 அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, March 15, 2025, 8:11 [IST]
Other articles published on Mar 15, 2025
English summary
IPL 2025: Ishan Kishan's Comeback: Will Sunrisers Hyderabad Revive His Career?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+