For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: அதிர்ஷ்ட நாயகன் ஹேசல்வுட்.. ஒரு முறை கூட பைனலில் தோற்காத சாதனை.. ஆர்சிபி கதையை மாற்றியவர்

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி ஐ யாருமே எதிர்பார்க்காத வகையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி 18 ஆண்டு கால தவத்தை நிறைவேற்றி இருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த விராட் கோலி ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக பெங்களூர் நகரவாசிகள் விடிய விடிய இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

பல திறமை வாய்ந்த வீரர்கள் விளையாடும் ஆர்சிபி அணி முதல் முறையாக தற்போது தான் கோப்பையை வென்றுள்ளது. இந்த நிலையில் rcb அணிக்கு அதிர்ஷ்டமே இல்லாமல் இருந்தது. இதுவரை இதற்கு முன்பு மூன்று முறை இறுதிப் போட்டிக்கு சென்றும் ஆர்சிபி தோல்வியை தழுவியது.

Josh Hazlewood

தற்போது நான்காவது முறையாக தான் முதல் கோப்பையை ஆர்சிபி கைப்பற்றி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட், இதுவரை விளையாடிய இறுதிப் போட்டிகளில் அவர் ஒரு முறை கூட தோல்வியை தழுவவில்லை என்ற ஒரு சாதனை இருக்கின்றது. இந்த சாதனைக்கு ஆர்சிபி ஆப்பு வைத்து விடும் என்று பலரும் கிண்டல் செய்த நிலையில் தற்போது ஹேசல்வுட்டின் அதிர்ஷ்டமே வென்று இருக்கிறது.

நடப்பு தொடரில் ஹேசல்வுட் 12 போட்டிகள் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இறுதிப்போட்டியில் ஹேசல்வுட் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும், பிரியாஸ் ஆர்யாவின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது

இதுவரை ஹேசல்வுட் விளையாடிய அனைத்து இறுதிப்போட்டிகளிலும் வென்றுள்ளார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம். முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடினார்.இதில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

2015 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக ஹேசல்வுட் விளையாடினார். அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஸ் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஹேசல்வுட் விளையாடினார். அதில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதேபோன்று 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹேசல்வுட் விளையாடினார்.

அதிலும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியே வெற்றி பெற்றது. இதேபோன்று 2021 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவே வென்றது.2023 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவே வென்றது. தற்போது ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஹேசல்வுட் விளையாட ஆர்சிபி அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது

Story first published: Wednesday, June 4, 2025, 0:42 [IST]
Other articles published on Jun 4, 2025
English summary
IPL 2025- Josh Hazlewood won every single Final He Played- Lucky Charm for RCB
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+