Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6, 6, 6, 6.. 19 பந்துகளில் அரைசதம் விளாசிய பொல்லார்ட்.. வயசானாலும் அந்த அதிரடி மட்டும் மாறாது பாஸ்!

செயின்ட் லூசியா: சிபிஎல் தொடரில் செயின்ட் லூசியா அணிக்கு எதிரான போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடைசி நேரத்தில் டிரின்பாகோ அணியின் வெற்றிக்கு 11 பந்துகளில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், கேப்டன் பொல்லார்ட் 4 சிக்சர்களை விளாசி அசத்தினார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிஎஸ்கே அணியுடன் சரிக்கு சமமாக மோதக் கூடிய அணியென்றால் மும்பை அணி தான். அதிலும் மும்பை அணிக்காக பொல்லார்ட் விளையாடிய வரை கடைசி பந்து வரை வெற்றி யாருக்கு என்பதை உறுதி செய்ய முடியாது. பொல்லார்டை கட்டுப்படுத்த முடியாது என்பதால், தோனியே சில புதிய முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு ஃபீல்ட் செட் அமைப்பார்.

ipl 2025 mumbai kieron pollard

ஆனால் ஐபிஎல் தொடரில் இருந்து பொல்லார்ட் ஓய்வு பெற்ற பின், அவரது இடத்தை நிரப்ப மும்பை அணி நிர்வாகம் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது. டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா, ஷெர்ஃபானே ரூதர்போர்ட் என்று ஏராளமான வீரர்களை முயற்சி செய்தும், மும்பை அணியால் பொல்லார்ட் இடத்தை நிரப்ப முடியவில்லை. இந்த நிலையில் கரீபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்ட் மிரட்டல் சம்பவம் ஒன்றை செய்து அசத்தியுள்ளார்.

சிபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் செயின்ட் லூசியா அணியை எதிர்த்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முலில் பேட்டிங் ஆடிய செயின்ட் லூசியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் 3 சிக்ஸ் உட்பட 26 பந்துகளில் 34 ரன்களை விளாசி அசத்தினார். அதேபோல் ராஸ்டன் சேஸ் 40 பந்துகளில் 56 ரன்களையும், சார்லஸ் 14 பந்துகளில் 29 ரன்களையும் விளாசினர்.

ipl 2025 mumbai kieron pollard

இதன்பின் 188 ரன்கள் என்ற இலக்குடன் டிகேஆர் அணியின் ஜேசன் ராய் - சுனில் நரைன் கூட்டணி களமிறங்கியது. சுனில் நரைன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பாரிஸ் அதிரடியில் பொளந்து கட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியும் பறக்க, பவர் பிளே ஓவர்களிலேயே டிகேஆர் அணியின் ஸ்கோர் எகிறியது. இதனிடையே தொடக்க வீரர் ஜேசன் ராய் 16 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பூரன் 17 ரன்களிலும், கார்டி 15 ரன்களில் வெளியேறினார்.

சிறப்பாக ஆடிய பாரிஸ் 33 பந்துகளில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டிரின்பாகோ அணி தடுமாறியது. இந்த நிலையில் கேப்டன் பொல்லார்ட் களம் புகுந்தார். 18 ஓவர்கள் முடிவில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்கோர் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் கடைசி 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. 19வது ஓவரை வீச ஃபோர்ட் அழைக்கப்பட்டார்.

ipl 2025 mumbai kieron pollard

அந்த ஓவரில் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 2வது பந்தில் அபார சிக்சர் பறக்க, மீண்டும் 3வது பந்தில் டாட் பாலாக மாறியது. இதன்பின் அடுத்த 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி பொல்லார்ட் தரமான சம்பவம் செய்தார். இதனால் இந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 24 ரன்கள் குவிக்கப்பட்டது. தொடர்ந்து கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசப்பட, டிரின்பாகோ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

அதேபோல் சிறப்பாக ஆடிய பொல்லார்ட் 19 பந்துகளில் 7 சிக்ஸ் உட்பட 52 ரன்களை விளாசி அசத்தினார். 37 வயதை எட்டிய போதும், பொல்லார்ட் பேட்டிங்கில் அதிரடி கொஞ்சம் கூட குறையவில்லை. இதனால் விஜய் நடிப்பில் வெளியான GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற "Lion is Always a Lion" என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Wednesday, September 11, 2024, 9:49 [IST]
Other articles published on Sep 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+