Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமே இதான்.. நாங்க இதை செய்ய தவறிவிட்டோம்-KKR கேப்டன் ரஹானே

கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் ஆர்சிபி அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 22 பந்துகள் எஞ்சிய நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே 200 ரன்களுக்கு மேல் அடிக்காமல் தவறு செய்து விட்டோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். தோல்விக்கு பிறகு பேசிய அவர் 13 வது ஓவர் வரை நாங்கள் சிறப்பாக விளையாடினோம்.

Rahane

ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்து இரண்டு மூன்று விக்கெட்டுகளை நாங்கள் இழந்து விட்டோம். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. எங்களுடைய பேட்டர்ஸ் ரன் குவிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. நானும் வெங்கடேஷ் ஐயரும் களத்தில் நிற்கும் போது 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம்.

அதை எட்டி விடலாம் என நினைத்தோம். ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் விழுந்ததால் போட்டியில் உத்வேகமே தலைகீழ் மாறியது. மேலும் ஆடுகளத்தில் கொஞ்சம் பனிப்பொழிவும் இருந்தது. இது பந்துவீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. ஆர்சிபி அணியும் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். நாங்கள் அடுத்த இலக்கு போதுமானது இல்லை.

இனி ஒவ்வொரு ஆட்டத்திலும் 200 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இன்னும் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து நாங்கள் பெரிய அளவு சிந்திக்கவில்லை. ஆனால் அதே சமயம் எந்தெந்த இடத்தில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம் என்பதை பார்த்து அதில் முன்னேற்றம் அடைய முயற்சி செய்வோம் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறியுள்ளார்.
கே கே ஆர் அணி சிறப்பாக விளையாடி வந்து நிலையில் குர்னல் பாண்டியா தன்னுடைய அபார பந்துவீச்சு மூலம் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Story first published: Sunday, March 23, 2025, 0:02 [IST]
Other articles published on Mar 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+