Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: இந்த படுதோல்விக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன்.. என்னால் தான் KKR தோற்றது.. கேப்டன் ரஹானே

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 112 ரன்கள் என்று இலக்கை எட்ட முடியாமல் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணி 95 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரை வெற்றிகரமாக தற்காத்துக் கொண்ட அணி என்ற பெருமையை பஞ்சாப் அணி பெற்று இருக்கிறது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இது நிச்சயம் எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால் நான் தவறான ஷார்ட் ஒன்றை ஆடினேன்.

Rahane

அதிலிருந்து தான் இந்த சரிவு தொடங்கியது. அப்போது நான் டிஆர்எஸ் எடுக்க விரும்பவில்லை. நான் அவுட்டா இல்லையா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இது நிச்சயம் எளிய இலக்கு தான். ஆனால் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. அதேசமயம் நாங்கள் ஒரு பேட்ஸ்மேன்களாக இந்த போட்டியில் மிகவும் மோசமாக விளையாடினோம்.

பஞ்சாப் அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நாங்கள் பொறுப்பில்லாமல் விளையாடியதே தோல்விக்கு காரணம் என நினைக்கின்றேன். ஒட்டுமொத்த அணியின் தவறுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன். தற்போது என் தலையில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது.

மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றேன். எனினும் முதலில் நான் அமைதியாக வேண்டும். அதன் பிறகு எவ்வாறு தோற்றோம் என்பது குறித்து ஆராய்ந்து அதன்பின் தான் எங்கள் அணி வீரர்களிடம் பேசுவேன் என்று ரஹானே கூறியிருந்தார். கொல்கத்தா அணி கடைசியாக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டு சென்னை அணியை 103 ரன்களில் சுருட்டியது.

அதனைப் 10 புள்ளி ஒரு ஓவரில் சேஸ் செய்தது. ஆனால் தற்போது அடுத்த போட்டியிலே கொல்கத்தா அணி 95 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியிருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் சாகல் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரேனின் சாதனையை சாகல் சமன் செய்துள்ளார்.

Story first published: Tuesday, April 15, 2025, 23:00 [IST]
Other articles published on Apr 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+