Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- தோனி ரசிகர்கள் கத்துவாங்களே என்ன செய்வீங்க.. கொல்கத்தா அணி பயிற்சியாளர் கொடுத்த பதில்

கொல்கத்தா: ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி புதன்கிழமை மாலை 7:30 மணிக்கு தொடங்கும்.

இந்த சூழலில் சிஎஸ்கே அணி ஏற்கனவே பிளே ஆப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த சூழலில் கொல்கத்தா அணிக்கு எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது.

Chandrakant Pandit

இந்த போட்டியில் ஒருவேளை கொல்கத்தா அணி தோல்வியை தழுவினால் தொடரை விட்டு வெளியேற நேரிடும். இந்த நிலையில் தோனிக்கு நாடு முழுவதும் பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சிஎஸ்கே அணி எந்த மாநிலத்தின் விளையாடினாலும் அது சொந்த ஊரில் விளையாடுவது போல் ரசிகர்கள் அதிகளவு கூடுவார்கள்.

இது குறித்து கொல்கத்தா அணி பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இது குறித்து பதில் அளித்த அவர், இதுபோன்ற போட்டிகளில் எல்லாம் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த திறன் மீதும் சொந்த விளையாட்டு மீதும் தான் கவனம் செலுத்தும்.

இப்போது ஒரு பேட்ஸ்மேன் விளையாடும்போது மைதானத்தில் அதிக அளவு சத்தம் இருந்தால், அந்த பேட்ஸ்மேனுக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. அவரிடம் நீங்கள் கேட்டால், சத்தமா? எனக்கு எதுவும் கேட்கவில்லையே என்று தான் சொல்வார். ஏனென்றால் வீரர்கள் அனைவரும் கிரிக்கெட் மீது கவனமாக இருப்பார்கள்.

பலரும் என்னிடம் இவ்வளவு சத்தமாக ரசிகர்கள் கத்தும் போது நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு காரணம் நாங்கள் போட்டியின் மீது கவனம் செலுத்துவோம். அப்போது வெளியில் என்ன நடக்கின்றது. என்ன சத்தம் கேட்கிறது என்று அனைத்தும் மறந்து விடும். எனவே எவ்வளவு சத்தம் போட்டாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தான் நான் சொல்வேன்.

தற்போது எங்கள் அணியில் எந்த ஒரு நெருக்கடியும் இல்லை. இந்த தொடரில் எங்கள் அணியின் பேட்டிங் வரிசை தான் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் அணியின் பேட்டிங் கிளிக் ஆகவில்லை. எனினும் அடுத்த மூன்று போட்டிகளில் எங்களுக்கு திறமைக்கான நீதியை நாங்கள் காட்டுவோம் என்று சந்திரகாந்த் பண்டித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, May 6, 2025, 22:54 [IST]
Other articles published on May 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+