Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார்? அம்பானி குழுவிற்கு ஆப்பு வைக்கும் ஷாரூக்கான் அணி

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலம் மூலம் பல திருப்பங்கள் ரசிகர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தலா ஆறு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் பல அணியும் பல வீரர்களை தங்களது அணிக்கு இழுக்க போராடி வருகின்றனர்.

இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை இருக்கின்றது. கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சீசனில் அதிரடியாக நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அந்த பதவிக்கு வந்தார். இந்த தருணத்தில் அடுத்த சீசனில் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ipl 2025 suryakumar yadav kkr ms dhoni 2025

இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். சூர்யாவின் தலைமையில் இந்திய அணி தற்போது டி20 கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூரியகுமார், ஐபிஎல் தொடரில் எந்த டி20 அணியின் கேப்டன் ஆகவும் இல்லை என்றால் அது தனிப்பட்ட முறையில் அவருக்கு பின்னடைவு தான்.

எனினும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது சூரியகுமார் யாதவ் இருப்பதால் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்காது. இதனை பயன்படுத்திக் கொண்டு தற்போது ஷாருக்கானின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சூரிய குமாரை தங்கள் அணிக்கு இழுக்க காய் நகர்த்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அதிக பணம் மற்றும் கேப்டன் பதவியும் தங்களது அணிக்கு வந்தால் தருகிறோம் என்று ஷாருக்கான் குழு கூறி இருப்பதாக தெரிகிறது.

இதனால் சூரியகுமார் யாதவ் தற்போது குழப்பத்தில் இருக்கிறார். சூரியகுமார் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டு அங்கு பல சீசனில் விளையாடி இருக்கிறார். அங்கு ஓரளவுக்கு வெற்றியை பெற்ற நிலையில் தான் அங்கிருந்து அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு புகழ் உச்சிக்கு சென்றார்.

தற்போது சூரியகுமார் யாதவுக்கு பெரிய அளவில் சம்பளமும் மும்பை அணியில் சம்பளம் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்ததால் அங்கு அதிருப்தி நிலவுகிறது. இதனால் சூரியகுமார் யாதவ் மும்பை அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

Story first published: Friday, October 25, 2024, 8:01 [IST]
Other articles published on Oct 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+