Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- KKR அணியில் நடந்த மிகப் பெரிய டிவிஸ்ட்! அதிரடி ஆல் ரவுண்டர் விலக முடிவு! 4 பேர் தக்கவைப்பு

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம் பிடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் சற்று நாட்களில் தெரிந்துவிடும். வரும் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்க போகிறார்கள் என்பதை அறிவித்து விடும்.

அந்த வகையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி மீதுதான் தற்போது அனைவரின் கவனமும் திரும்பி இருக்கிறது. கம்பீர் கொல்கத்தா அணியிலிருந்து தற்போது இந்திய அணிக்கு சென்றுள்ள நிலையில் கேகேஆர் அணியில் என்ன மாற்றம் நடக்கப்போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

ipl 2025 shreyas iyer kkr ms dhoni 2025

இந்த சூழ்நிலையில் கேகேஆர் அணியில் முதல் வீரராக ஆண்டிரூ ரஸில் தக்க வைக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது ஒரு மிகப்பெரிய டிவிஸ்ட் நடந்துள்ளது. அதன்படி ஆண்டிரூ ரஸில் வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் கே கே ஆர் அணி தங்களுடைய முதல் வீரராக சுனில் நரைனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து இரண்டாவது அணியாக ரிங்கு சிங்கையும் மூன்றாவது வீரராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியையும் தக்க வைக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இன்னையிலிருந்து நான்காவது வீரராக இந்திய அணிக்காக விளையாடிய ஹர்ஷத் ராணா என்ற வேகப் பந்துவீச்சாளரை கேகேஆர் தக்கவைக்க போகிறது.

இதனை அடுத்து ஏலத்திற்கு சென்று ஆர் டி எம் கார்டை பயன்படுத்தி வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை செய்ய கேகேஆர் அணிக்கு வர விருப்பம் தெரிவிக்கவில்லை என்றால் அவருக்கு பதில் வேறு ஒரு வீரரை தேர்வு செய்ய கேகேஆர் முடிவெடுத்துள்ளது.இதன் மூலம் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, வெங்கடேஷ் ஐயர் என நான்கு முக்கிய இந்திய வீரர்களை தக்க வைத்துக்கொள்ள கேகேஆர் ஆர்வம் காட்டி வருகிறது.

Story first published: Monday, October 28, 2024, 19:33 [IST]
Other articles published on Oct 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+