Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பெங்களூரில் கனமழை.. ஆர்சிபி, கேகேஆர் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் பாதியிலே நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது. இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி, கே கே ஆர் அணிக்கு இடையிலான போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தருணத்தில் ஆர் சி பி அணி எஞ்சிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றி தகுதி பெற முடியும்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை 11 புள்ளிகள் பெற்று இன்னும் இரண்டு ஆட்டங்கள் தான் எஞ்சி இருக்கிறது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் கூட கொல்கத்தா அணிகளால் 15 புள்ளிகள் தான் பெற முடியும். மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

RCB vs KKR

இந்த நிலையில் பெங்களூரில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்று ஓட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கனமழை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இரவு 9 மணி வரை இந்த கனமழையானது நீடிக்கும் என்று கணிக்கப்பட்டது போல், மழை கொட்டியது.

இந்த நிலையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தண்ணீர் வெளியேறும் வசதி சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. வடிகால் வசதி நன்றாக இருப்பதால் ஆடுகளத்தை எப்படியும் தயார் செய்து விட முடியும் என்று நம்பிக்கையில் பிசிசிஐ இருந்தது. ஆனால், அனைத்தையும் மழை பாழாக்கியது.

இதனையடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 14 புள்ளிகளை பெற முடியும் என்பதால் அவர்கள் தொடரை விட்டு வெளியேறினார்கள். ஆர் சி பி அணி 17 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

எனினும் ஆர் சி பி அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பு உறுதியாகாது. எஞ்சிருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற வேண்டிய நிலை ஆர் சி பி அணிக்கு ஏற்படும். இதனிடையே, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக ரசிகர்கள் வெள்ளை நிற ஜெர்சியுடன் வந்து வழி அனுப்ப சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர் ஆனால் மழை அவருடைய திட்டத்தில் விளையாடிவிட்டது.

Story first published: Saturday, May 17, 2025, 18:59 [IST]
Other articles published on May 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+